மணப்பெண் பஞ்சம்! சீனாவுக்கு மனைவிகளாக கடத்தப்படும் பெண்கள்! ஆனால்? திக் திக் ரிப்போர்ட்!

சீனாவின் இன்றைய இளம் பெண்களுக்கு திருமணத்தில் ஆர்வமில்லை.


கற்பனை செய்ய முடியாத அளவுக்கு ஆனாதிக்க சமூகமாக இருந்த சீனத்தில் இன்றைய தலைமுறைப் பெண்கள் சம்பாதிக்கத் துவங்கிவிட்டதால் அவர்கள் திருமணம் செய்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. கிராமப் புறங்களில் நிலமை இன்னும் மோசம்.அதனால் அக்கம் பக்கத்திலிருந்து பெண்களைக் கடத்தும் தொழில் இப்போது சீனாவில் களை கட்டி இருக்கிறது.

பர்மாவில் இருந்தும் கடத்தப் படுகிறார்கள் என்றாலும் அது முழுக்க முழுக்க ரகசியமாகவும்,சட்ட விரோதமாகவும் தான்.ஆனால் பாகிஸ்த்தான் நாட்டுக்கு பில்லியன் கணக்கில் சீனா பணத்தை இறைப்பதாலும்,அங்கே ஆயிரக்கணக்கான சீனர்கள் பணிபுரிவதாலும் அவர்களுக்கு அங்கிருந்து பெண்களை கவர்வதும் கடத்துவதும் எளிதாகிறது.

அவர்கள் குறிவைப்பது பாகிஸ்த்தானில் இருக்கும் பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் கிறித்தவ பெண்களை.லாகூர், பெஷாவர்,வாசிபூர்,பைசலாபாத் நகர்புறங்களில் வசிக்கும் கிறிஸ்த்தவ மக்கள் மிகுந்த வறுமையில் இருக்கின்றனர்.

இந்தப்பகுதியில் இருக்கும் இளம் பெண்களை பெற்றோருக்கு பணம் கொடுத்து வாங்கி சீனாவுக்கு அழைத்துப் போகிறார்கள்.இதற்கு புரோக்கர்கள் மட்டுமல்ல, கிராமப் பகுதிகளில் பணியாற்றும் கிறித்துவமத பாஸ்ட்டர்களும் உதவுகிறார்கள்.

இப்படிக் கடத்தப்பட்ட நாடாஷா மாஷி என்கிற பெண் மூலம்தான் இந்த விவகாரம் முதலில் வெளிவந்தது.19 வயது நடாஷாவை சீனாவுக்கு அழைத்து வந்த அவள் கணவன்,வடக்கு சீனாவில் உள்ள ஒரு கிராமத்துக்கு அழைத்து வந்திருக்கிறான்.அங்கே சமையல் அறையோ,கழிபறையோ இல்லாத ஒரு வீட்டில் நடஷாவத் தங்கவைத்திருக்கிறான்.அந்த வீட்டில் நடாஷாவின் கணவன் தவிர மேலும் மூன்று ஆண்கள,இரண்டு பெண்களும் இருந்திருக்கிறார்கள்.

நடாஷாவை அவர்களுடனும் உறவு கொள்ளும்படி அடித்து உதைத்து இருக்கிறான்.ஆரம்பத்தில் இதை தன் தாய்க்கு சொல்ல தயங்கிய நடாஷா கொடுமை தாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் தன் தாயிடம் சொல்லி அழுதிருக்கிறாள்.இதற்குப் பிறகுதான் இந்த பெண் கடத்தல் விவகாரம் வெளிவந்திருக்கிறது.

பாகிஸ்தானின் ஃபெடரல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி களத்தில் இறங்கி 25 சீனர்களையும்,12 பாகிஸ்தானியரையும் கைது செய்திருக்கிறது.கைது செய்யப்பட்டவர்களில் கிறிஸ்தவ பாஸ்ட்டர்களும் அடக்கம்.கைது செய்யப்பட்ட பாஸ்ட்டர் ஒருவரிடமிருந்து,மணமக்களின் பெயர்தவிர மற்ற அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்ட 20 திருமணச் சான்றிதழ்கள் கைப்பற்ற பட்டிருக்கின்றன.

சிறுபான்மை கிறிஸ்தவர்களிடையே பணியாற்றும் இஜாஸ் ஆலம் அகஸ்டின் என்கிற தன்னார்வலர் பெஷாவரில் இருந்து மட்டும் 1000 பெண்கள் விற்கப்பட்டு இருப்பதாகச் சொல்கிறார்.ஆனால்,அரசின் கணக்கு அதில் பாதிதான் . இப்படிக் கடத்தப்பட்ட பெண்களில் நடாஷா போன்ற சிலரை சீனாவில் படிக்கும் பாகிஸ்தான் மாணவர்கள் காப்பாற்றி மீண்டும் பாகிஸ்தானுக்கே அனுப்பினாலும்,

இன்னும் பல்லாயிரம் பாகிஸ்தான் இளம் பென்கள் சீனாவில் பாலியல் தொழில் செய்வோரிடம் விற்கப்பட்டு நரகத்தில் உழல்கிறார்கள்.இது போலவே சுமார்யா என்கிற இளம் பெண் தன் சகோதரர்களால் சீனருக்கு விற்கப்பட்டு தப்பி வந்திருக்கிறார்.இவர் ஊடகங்களில் பேசிய பிறகுதான் இதுபற்றி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு தெரிய வந்திருக்கிறது.

சமீபத்தில் பாகிஸ்தானுக்கு வந்த சீன துனை ஜனாதிபதி வாங் குய்சானிடம் இம்ரான்கான் இது பற்றி வினவியபோது வாங் அதை மறுத்ததுடன் ,சீனர்களை மணந்த பாகிஸ்தான் பெண்கள் உற்சாகமாக நடனமாடும் வீடியோக்களை இம்ரானுக்கு காட்டி இருக்கிறார்.இதில் வேடிக்கை என்னவென்றால் கிறித்தவ பெண்களை விற்கும் பாகிஸ்தான் பெற்றோருக்கு புரோக்கர்கள் இதே வீடியோவைத்தான் போட்டு காட்டு வார்களாம்.

அரபிக் கடலில் சீனா அமைக்கும் கெள்தார் துறைமுகம்,75 பில்லியன் செல்வில் சீனா அமைக்கும் சில்க் ரோடு போன்ற திட்டங்கள் பாகிஸ்தானின் பொருளாதாரத்தை தீர்மானிப்பதால் பாகிஸ்த்தான் அரசு இதில் கடுமையான நிலைப்பாடு எடுக்க வாய்ப்பில்லை.தற்போது கடும் நிதி தட்டுப்பாடில் இருக்கும் பாகிஸ்தான் சீனர்கள் மீது நேர்மையாக நடவடிக்கை எடுக்க வாய்பில்லை.

வருமானத்தைப் பொறுத்த வரை தமிழகமும் பாகிஸ்தானும் கிட்டத்தட ஒன்று என்பதால் இந்தியாவை எதிர் கொள்ள பாகிஸ்தானுக்கு சீனத்தின் தயவு வேண்டும்.மதம்,இறையாண்மை எல்லாவற்றையும் விட டாலரும் ,யென்னும் சக்தி வாயந்தவை என்பதால் இந்த அபலைப் பெண்களின் குரல் வெளி உலகுக்குத் தெரிய வாய்ப்பே இல்லை,என்பதுதான் நிஜம்.