அவன் தான் வேணும்! ஸ்ரீதேவி இளைய மகள் அடம்!

நடிகை ஸ்ரீதேவி தமிழகத்தின் சிவகாசியில் பிறந்து பாலிவுட் திரை உலகில் கொடி கட்டி பறந்தவர். இவருக்கு கடந்த 1996ஆம் ஆண்டு பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூருடன் திருமணம் நடைபெற்றது.


 இந்த திருமணத்தின் மூலம் ஸ்ரீதேவிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. அவர்கள் ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் ஆகியோர். இதில் ஜான்வி கபூர் தற்போது படங்களில் நடித்து வருகிறார். ஜான்வி கபூருக்கு 20 வயதாகிறது. அவரது தங்கை குஷி கபூருக்கு 18 வயது மட்டுமே ஆகிறது. இந்நிலையில் இருவரும் சமீபத்தில் ஒரு தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர்.

தற்போது 18 வயதான குஷி கபூர் வெகு சீக்கிரத்தில் பாலிவுட் திரையுலகில் அறிமுகமாக உள்ளார். மேலும் சமீபத்தில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குஷி கபூரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் உங்களுக்கு யாருடன் முதல் படத்தில் நடிக்க வேண்டும் என்றும் கேட்கப்பட்டது.

 இது குறித்து கூறிய அவர் குறிப்பாக… இதில் ஆஹன் பாண்டே, ஆர்யன் கான் மிர்ஸான் ஜாபர் ஆகிய மூவரது பெயரும் கொடுக்கப்பட்டது. இதில் இரண்டு பேரை நிராகரித்த குஷி கபூர் ஆஹன் பாண்டே உடன் முதல் படத்தில் நடிக்க ஆசையாக இருப்பதாகக் கூறியுள்ளார்