ரஜினிக்கு ஆதரவாக களம் இறங்கும் குஷ்பு..! காங்கிரஸில் இருந்து அவுட்..?

தி.மு.க.விலிருந்து வெளியேறிய குஷ்பு, காங்கிரஸில் நல்ல இடம் கிடைக்கும் என்று எவ்வளவோ ஆவலாக காத்திருந்தார். ஜோதிமணிக்கு மதிப்பும் மரியாதையும் கொடுத்த ராகுல்காந்தி குஷ்புவை கண்டுகொள்ளவே இல்லை.


அதனால் ஆக்டிவ் அரசியலில் இருந்து விலகிவிட்டார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவருக்கு ஆதரவாக இருந்த இ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்காக மட்டுமே பிரசாரம் மேற்கொண்டார். மற்றபடி கப்சிப் என இருந்துவந்தார். ரஜினி கட்சி ஆரம்பித்தால் அங்கே போய்விடலாம் என்று காத்திருப்பதாக பலரும் சொல்லிவந்த நிலையில், அது உண்மை என்பது போன்று இன்று ரஜினிக்கு ஆதரவாக ஒரு ட்வீட் போட்டிருக்கிறார் குஷ்பு.

உண்மையோ, பொய்யோ சொன்ன விஷயத்தில் உறுதியாக இருக்கிறார் ரஜினி. இப்படித்தான் இருக்கவேண்டும் என்று வான்டட் ஆக வண்டியில் ஏறியிருக்கிறார். குஷ்புவின் இந்த ட்வீட் காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. ரஜினி கட்சி தொடங்கினால், அதில் போய் சேரப்போகும் முதல் ஆளாக குஷ்பு இருப்பார் என்று சொல்வது உண்மையாகப் போகிறதாம்.