சாகச பிரியர்களை கவரும் நெய்யருவி! அலை அலையாக செல்லும் சுற்றுலாப் பயணிகள்!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குண்டாறு நீர்த்தேக்கத்திற்க்கு ஆதாரமாக அமைந்துள்ள நெய்யருவியில் குளிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.


தற்போது தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் அங்கங்கே உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் குற்றாலத்திற்கு செல்லும் மக்கள் அனைவரும் குண்டாறு நெய்யருவியல் நீராடி செல்ல அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பரவலாக மழை பெய்த காரணத்தினால் அங்கு உள்ள ஆறுகள் மற்றும் நீர் நிலைகளில் நீர் வரத்து அதிகமாக காணப்படுகிறது.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் குண்டாறு நீர்தேக்கத்திற்கு மிகவும் முக்கியமான ஆதாரமாக இருப்பது அவ்வழியே செல்லும் நெய்யருவி.

இந்நிலையில் மழை சிறிது குறைந்ததால் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகமாக காணப்பட்டுவருகிறது. அங்கு வரும் பெரும்பான்மையான சுற்றுலா பயணிகள் அருவியில் நீராடுவதற்காக வந்து செல்கின்றனர்.

தற்போது 4 நாட்கள் தொடர்ந்து விடுமுறை வருவதால் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் அங்கு உள்ள நீர்த் தேக்கங்களில் ஆனந்தமாக நீராடி வருகின்றனர்.

அங்கு வரும் சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் அங்கு உள்ள அருவிகளில் நீராடி செல்வதை பார்க்க முடிகிறது.