சீனாவில் அதிவேகமாக பரவி வருகிறது ஆட்கொல்லி வைரஸான கொரோனா. இதுவரை அதிகாரபூர்வமாக 3 பேர் மரணம் அடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், அதைவிட கூடுதலாகவே மரணம் நிகழ்ந்திருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது.
சார்ஸ் வைரஸ் போலவே வந்துவிட்டது கொரோனா வைரஸ்... நுரையீரல் ஜாக்கிரதை.

இதுவரை 41 பேர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளனர் என்று சீனா கூறப்படுகிறது. ஆனால், இந்த எண்ணிக்கை 1,700 வரை இருக்கலாம் என்று பிரிட்டன் நிபுணர்கள் கணக்கிடுகிறார்கள். கடந்த டிசம்பர் மாதம் வுஹான் நகரில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் தீவிர நுரையீரல் நோயை உருவாக்கி வருகிறது.
வுஹான் நகரில் இந்த வைரஸ் பரவியதை தொடர்ந்து, தாய்லாந்தில் இருவரும், ஜப்பானில் ஒருவருக்கும் இந்த வைரஸ் பரவி இருப்பது தெரிய வந்தது. இந்த வைரஸ் மனிதர் மூலம் பரவுவது போல தெரியவில்லை. அசைவ உணவுகளின் சந்தையில் இருக்கும் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்து பரவி இருப்பதாக சீன அதிகாரிகள் கூறுகிறார்கள்.
கொரோனா வைரஸ்கள் என்பது பெரிய வைரஸ் குடும்பம். இதில் மனிதர்களை பாதிக்கக்கூடியவையாக ஆறு வகை வைரஸ் இருந்தன, தற்போது இந்த மர்ம வைரஸ் ஏழாவது வகையாக இருக்கக்கூடும்.
இந்த கொரானோ வைரஸின் மரபணு குறிமுறை கிட்டத்தட்ட சார்ஸ் வைரஸுக்கு நெருக்கமானது போன்று இருக்கிறது என நிபுணர்கள் கூறுகின்றனர். சார்ஸ் என்பதே மனிதர்களை பாதிக்கும் கொரோனா வைரஸின் ஒரு வகை என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்தியர் ஒருவருக்கும் இந்தப் பாதிப்பு கண்டுபிடிக்கப் பட்டிருப்பதால், உஷார் மக்களே உஷார்.