வெறும் ரூ.24 ஆயிரம்..! 5 நிமிடத்தில் 3 கொலை! கர்ப்பிணி, கணவன், மகன் கொடூர கொலையின் திடுக் காரணம்! கொலையாளியின் பகீர் வாக்குமூலம்!

கொல்கத்தா: மேற்கு வங்க ஆசிரியர் கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.


மேற்கு வங்க மாநிலம், ஜியாகஞ்ச் பகுதியில், பள்ளி ஆசிரியராகப் பணிபுரியும் பாந்து பிரகாஷ் பால், அவரது கர்ப்பிணி மனைவி மற்றும் 8 வயது மகன் ஆகியோர் கடந்த அக்டோபர் 8ம் தேதியன்று வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். பிரகாஷ் பால் ஆர்எஸ்எஸ் ஊழியர் என்றும், அவர் மீது அரசியல் ரீதியான அடக்குமுறை நிகழ்த்தப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் பரவின. ஆனால், தனது மகன் ஆர்எஸ்எஸ் ஊழியர் இல்லை என, பிரகாஷின் தாய் ஏற்கனவே மறுப்பு தெரிவித்திருக்கிறார்.  

இதுபற்றி விரிவான விசாரணை நடத்திய போலீசார், நள்ளிரவில் இளைஞர் ஒருவர் அப்பகுதியில் கத்தியுடன் ஓடியதாக, பொதுமக்களிடம் இருந்து தகவல் பெற்றனர். இதன்பேரில், கொலை நடந்த நாளில், அப்பகுதியில் செயல்பாட்டில் இருந்த செல்ஃபோன் எண்களை போலீசார் ஆய்வு செய்தனர். இதில், பிரகாஷ் பால் ஃபோனுக்கு, உட்பால் குமார் என்பவரிடம் இருந்து அடிக்கடி அழைப்பு வந்த விவரம் கிடைத்தது.

இருவரும் உறவினர்கள் என்ற நிலையில் உட்பால் குமார், பிரகாஷ் மூலமாக இன்சூரன்ஸ் பாலிசி போட்டு வந்துள்ளார். வருடந்தோறும் ரூ.24,167 பிரிமீயம் செலுத்திய நிலையில் பிரகாஷ் அதற்கு உண்டான பில் எதையும் உட்பால் குமாரிடம் தரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், பிரகாஷை போட்டு தள்ள உட்பால் குமார் தீர்மானித்துள்ளார்.  

இதன்படி, விஜயதசமி அன்று இரவு 10.30 மணிக்கு உட்பால் குமார், பிரகாஷ் வீட்டிற்குச் சென்று, அனைவரையும் குத்திக் கொன்றுவிட்டு தப்பியோடியிருக்கிறார். இதையடுத்து, உட்பால் குமாரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.