நள்ளிரவு! ஓலா கால் டாக்சியில் மாடல் அழகி! டிரைவருக்கு ஏற்பட்ட தவறான எண்ணம்! பிறகு அரங்கேறிய பயங்கரம்!

கொல்கத்தா அழகி பெங்களூருவில் கொலை செய்த பின் 500 ரூபாய் மட்டுமே கிடைத்ததால் ஓட்டுநர் அதிர்ச்சி. அழகிகளுக்கு ஆபத்தாகிறதா கால்டாக்சிகள்.


கொல்கத்தாவை சேர்ந்த மாடல் அழகி பெங்களூருவில் கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில் குற்றவாளியான கால் டாக்சி ஓட்டுநரை கைது செய்துள்ளது போலீஸ். 

பெங்களூரு விமான நிலைய சுற்றுச் சுவர் அருகே  ஜூலை மாதம் 31ம் தேதி 32 வயதான ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் அவர் பெயர் பூஜா சிங் என்பவதும் அவர் கொல்கத்தாவை சேர்ந்த மாடல் அழகி என்பதையும் கண்டுபிடித்தனர்.

பின்னர் வழக்குப்பதிந்து போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் பூஜா சிங்கை கொலை செய்தது ஓலா நிறுவன கால் டாக்சி ஓட்டுநர் என்பதை கண்டுபிடித்து அவரை கைது செய்துள்ளனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் நமக்கு தெரிவித்தபோது, கொல்கத்தாவில் வசிக்கும் மாடல் அழகியான பூஜா சிங் ஜூலை 30ம் தேதி ஒரு ஈவன்ட் மேனேஜ்மண்ட் நிகழ்ச்சியில் பங்கேற்க பெங்களூரு வந்துள்ளார். பின்னர் நிகழ்ச்சி முடிந்து மறுநாள் கொல்கத்தா செல்ல ஓலா கால் டாக்சி செல்போன் மூலம் அழைத்துள்ளார்.

அப்போது நாகேஷ் என்கிற கால் டாக்ஸி ஓட்டுநர் பூஜா சிங்கை காரில் ஏற்றிக்கொண்டு விமான நிலையம் நோக்கி நகர்ந்தார். அதிகாலை நேரம் என்பதாலும் சாலையும் வெறிச்சோடி இருந்தாலும் ஓட்டுநர் நாகேஷுக்கு மனதில் தவறான எண்ணம் ஏற்பட்டுள்ளது. கால் டாக்சியில் வந்த பூஜா சிங் மிகவும் அழகாகவும் கோடீஸ்வர வீட்டுப் பெண் போல இருந்ததாலும் அவரது மனதில் ஒரே நாளில் பணக்காரனாகி விடலாம் என தோன்றி உள்ளது.

பின்னர் பூஜா சிங்கிடம் பேச்சுக் கொடுத்த ஓட்டுநர் நாகேஷ் தான் கஷ்டப்படுவதாகவும் பணம் அதிகம் கொடுக்குமாறும் கேட்டுள்ளார். அதற்கு பூஜா சிங் மறுக்கவே அவரது கைப்பையில் எப்படியும் லட்சக்கணக்கில் பணம் இருக்கும் என யோசித்த ஓட்டுநர் தனிமையில் இருந்ததை பயன்படுத்தி அவரை இரும்புக் கம்பி ஒன்றில் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதனால் பூஜா சிங் மயங்கி விழுந்தார். பின்னர் அவர் சாகும் வரை கொடூரமாக தாக்கி கொன்றபின் அவரது உடலை கேம்பகவுடா சர்வதேச விமான நிலைய சுற்றுச்சுவர் அருகே போட்டுள்ளார். பின்னர் பூஜாவின் பணத்தை கொள்ளையடிக்க நினைத்து அவரது கைப்பையை திறந்து பார்த்தபோது அதில் வெறும் 500 ரூபாய் மட்டுமே இருந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியும் ஏமாற்றமுமே நாகேஷுக்கு மிஞ்சியது. இதையடுத்து பூஜாவின் கைப்பை, அவரது அடையாள ஆவணங்கள் செல்போன் அனைத்தையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் கிராம வாசிகள் கொடுத்த தகவலின் பேரில் நாங்கள் சென்று பூஜா சிங் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு குற்றவாளியை கைது செய்தோம் என தெரிவித்தனர்.