அரையிறுதியில் தோனி ரன் அவுட்! அதிர்ச்சியில் செத்தே போன கிரிக்கெட் ரசிகர்! வேதனையில் குடும்பத்தினர்!

நியூஸிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் முக்கியாயமான கட்டத்தில் தோனி ரன் அவுட் ஆனதை தாங்கிக்கொள்ளமுடியாமல் ரசிகர் ஒருவர் அந்த நிமிடமே உயிரிழந்துள்ளார்.


கொல்கத்தாவை சேர்ந்த ஸ்ரீகாந்தா மைட்டி சொந்தமாக சைக்கிள் ஷாப் ஒன்று நடத்தி வந்தார். 33 வயதான இவர் இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை அரை இறுதி போட்டியை தனது செல் போனில் பார்த்து வந்தார்.

போட்டியின் முக்கியமான கட்டத்தில் தோனி ரன் அவுட் ஆனதும் இந்தியாவின் உலகக்கோப்பை கனவு பறிபோனது. தோனி ரன் அவுட் ஆனதை தாங்கிக்கொள்ள முடியாத அந்த ரசிகர் அடுத்த நிமிடமே மயக்கமாகிவிட்டார்.

இதை அறிந்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிகிறது. கொல்கத்தாவில் நடந்த இந்த நிகழ்வு அந்த பகுதி மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.