கொல்கத்தாவில் இரு சொகுசு கார்கள் மோதிய விபத்தில் இரு இளைஞர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
அசுரவேகத்தில் வந்த ஜாக்குவார் கார்! திடீரென குறுக்கிட்ட பென்ஸ் கார்! நொடியில் நிகழ்ந்த கோரம்! 2 பேர் பலியான பரிதாபம்!

கொல்கத்தாவில் பிரபல பகுதியான பார்க் தெருவில் இந்த விபத்து அதிகாலை 2 மணியளவில் நிகழ்ந்துள்ளது. அரசலான் என்ற பிரபல உணவகத்தை நிர்வகிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் ஜாகுவார் காரை ஓட்டி வந்துள்ளார்.
அதிவேகத்தில் வந்த காரானது மெர்சிடிஸ் கார் மீது பலமாக மோதியுள்ளது. மோதிய வேகத்தில் வந்த கார் ஆனது காவல் நிலைய சுவரின் மீது பாய்ந்து சென்று விழுந்துள்ளது.
அப்போது மழை பெய்து கொண்டிருக்கவே காவல் நிலையம் அருகே தஞ்சமடைந்த இரு இளைஞர்கள் மீது கார் மோதியது. இதில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஒருவர் படுகாயங்களுடன் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர்கள் உறவினர் ஒருவரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு சாப்பிட்டு முடித்த பின்னர் மீண்டும் மருத்துவமனை செல்ல காருக்காக காத்திருந்தது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தை ஏற்படுத்திவிட்டு ஜாகுவார் காரின் ஓட்டுநரான 22 வயது இளைஞரை போலீஸார் கைது செய்தனர். எடின்பர்க் இல் அந்த இளைஞர் கல்லூரி கல்வி பயின்று வருவதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்த கோர விபத்தில் மெர்சிடஸ் காரில் இருந்த ஓட்டுனர் மற்றும் பயணி என இருவர் படுகாயமடைந்தனர்.