குழந்தைகள் விற்பனையை தடுக்க இது ஒன்று தான் ஒரே வழி! ஈஸ்வரனின் அடடே யோசனை!

குழந்தைகள் விற்பனையை தடுக்க வேண்டும் என்றால் தத்து எடுக்கும் வழிமுறைகளை எளிமையாக்க வேண்டும் என்று கொங்கு நாடு மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் யோசனை தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

ராசிபுரத்தில் நடந்த குழந்தைகள் கடத்தல் சம்பவம் போன்று மீண்டும் நிகழாமல் தடுக்க, குழந்தைகளை தத்தெடுக்க கடைபிடிக்கப்படும் கடுமையான சட்ட நடைமுறைகளை தளர்த்த வேண்டும்.  குழந்தைகளை தத்தெடுக்கும் நடைமுறைகள் மிகவும் கடுமையாக உள்ளது.

குழந்தைகளை கடத்தி விற்பனை செய்கிறார்கள். காப்பகத்தில் வளரும் குழந்தைகளை தத்தெடுக்க பலர் முன் வருவதாகவும், சட்டப்படி தத்தெடுக்க வேண்டுமென்றால் 4, 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலையுள்ளது.

குழந்தையை தத்தெடுப்பதில் எளிமையான சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டால் இடைத்தரகர்களுக்கு வேலை இல்லாமல் போகும்.  குழந்தைகள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க தனி குழுவை அமைத்து தமிழக அரசு ஆராய வேண்டும். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.