1,000 ஆண்டுகளுக்கு முன்னரே ராஜராஜ சோழன் அரசைவை பிரதிநிதிகளை சீனாவுக்கு அனுப்பி வர்த்தக தொடர்பு ஏற்படுத்தி உள்ள வரலாற்ற நிகழ்வு தற்போது தெரியவந்துள்ளது.
மாமல்லபுரம் வரும் சீன அதிபர்! மாமன்னன் ராஜராஜ சோழனுக்கும் சீனாவுக்கும் உள்ள அசர வைக்கும் தொடர்பு தெரியுமா?

இந்தியா-சீனா இடையே வர்த்தக உறவை மேம்படுத்தும் வகையிலும், இரு நாடுகளுக்கும் நட்புணர்வை மேம்படுத்தும் வகையிலும் சீன அதிபர் ஜி ஜின்பிங் அக்டோபர் 11-ந்தேதி மாமல்லபுரத்திற்கு வருகிறார். பிரதமர் மோடியை சந்தித்து பேசுவது மட்டுமின்றி மாமல்லபுரத்தில் உள்ள கோவில்களை சுற்றிப்பார்க்க உள்ளார். இதனால் சென்னை விமான நிலையம் முதல் முட்டுக்காடு வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளது.
மாமல்லபுரத்துக்கு சீன அதிபர் வரும் நிலையில், நமது மாமன்னர் இராஜராஜ சோழன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவுடன் வர்த்தகம் செய்துள்ளார் என்ற தகவல்கள் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
1014-ம் ஆண்டில் தஞ்சை நிலப்பரப்பை ஆட்சி செய்து கொண்டிருந்த ராஜராஜ சோழன் தனது அமைச்சரவை பிரதிநிதிகளை தூதர்களாக சீனாவுக்கு அனுப்பி அந்நாட்டு அரசருடன் வர்த்தகத்தொடர்பை ஏற்படுத்தியுள்ளார்.
இதை உறுதி செய்யும் விதமாக அந்நாட்டின் கேன்டோன் பகுதியில் 14-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட திருகானிஸ்வரர் என்ற சிவன் கோவில் உள்ளது. அப்போதைய மங்கோலிய மன்னர் செகசாய் கான் என்பவரது பெயரின் முடிவினை குறிக்கும் விதமாக ’கானிஸ்வரம்’என அந்த சிவன் கோயிலுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.
நாகையில் 15-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு புத்த கோவிலுக்கு 'சீனக்கோவில்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த போன்று தமிழகத்தை சேர்ந்த மன்னர்கள் சீனாவுடன் வர்த்தகம் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளதற்கான பல்வேறு ஆதாரங்கள் தமிழ்நாட்டிலும், சீனாவிலும் காணப்படுகிறது.