கீழடி ஆய்வு! 2300 ஆண்டுகள் வரலாறு! மதம், கடவுளை மறுத்தவனா பழந் தமிழன்?

சமீபத்திய தமிழக அகழ்வாய்வுகளை வைத்துக் கொண்டு பழந்தமிழருக்கு மதம் என்பதே இருக்கவில்லை, வழிபாடு என்பதே நடைபெறவில்லை என்று முடிவுக்கு வருவது அபத்தமானது.


இவர்கள் அகழ்வாய்ந்துக் கொண்டிருப்பது இரும்புக்கால பண்பாடு குறித்து. அதற்கு முன்னரே, பழைய உலகில் ஒன்றை ஒன்று சாராமல் சுதந்திரமாக எழுந்த செப்புக்கால பண்பாடுகள் அனைத்திலும் கூட கடவுள்களும், வழிபாடும், மதமும் பூசாரிகளும் மதம் சார்ந்த இலக்கியங்களும் இதிகாசங்களும் இருந்ததற்கான ஆதாரங்கள் உண்டு. 

பின் செப்புக்கால நாகரிகங்கள் பலவற்றில் சிவன் போன்ற ஒற்றை ஆண் தெய்வமோ (சிந்து நாகரிகத்தின் 'பசுபதி'), ஒற்றை பெண் தெய்வமோ அல்லது இருவரில் ஒருவரின் மகனாக கருதப்பட்ட இளம் குமர கடவுள் ஒருவரையோ வழிபட்டதற்கான ஆதாரங்கள் ஏராளம் உள்ளன. இப்பண்பாடுகளுக்குள் வணிக உறவுகளோ வேறு தொடர்புகளோ இருந்ததா என்பதெல்லாம் தொடர்ந்து ஆய்வில் உள்ள விசயங்கள்.

சுமேரிய காலத்திய நரசிம்ம உருவங்கள் பிரசித்தம். ஆனால், இவை எதுவுமே, ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் இருந்து நடந்தே வந்து இங்கு சேர்ந்தவர்களுக்கு தொடர்புடையவை அல்ல. அச்சமயம் அவர்கள் குதிரை மேய்த்துக் கொண்டிருந்தனர். ஹிந்தகுஷ் மலைகளை தாண்டிய பிறகே அவர்களுக்கு நிலையாக ஓரிடத்தில் தங்கி மேம்பட நேர வாய்த்தது.

மணிகளும், நுட்பமான கலைத்திறனுடன் அணிகலன்களும் படைக்குமளவுக்கு அறிவும், தாயக்கட்டை உருட்டுமளவுக்கு நேரமும் வாய்த்திருந்தவர்கள் கடவுளை எல்லாம் கண்டுபிடிக்காமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. இன்றைய பிராமண கோட்பாடுகளுடனான மதமாக இருந்திருக்காதே தவிர, எதையோ தொழுதிருப்பர்.

மனிதன் சங்கேத தொடர்புகளை தாண்டி மொழியை உருவாக்கி, விவசாயம் செய்ய நிலையாக ஓரிடத்தில் தங்க முற்பட்டதும், செய்த முதல் வேலை சாமிகளை உருவாக்கியது தான் என்று வரலாற்றாசிரியர்களால் நிறுவப்பட்டிருக்கும் உண்மை. 

எதைக் கண்டாலும் இது ஹிந்து மதத்தில் உள்ளது, மகாபாரத்தில் சொன்னது, ராமாயணத்தில் வந்தது என்னும் காவி காலித்தனம் போன்றது தான், அக்கால தமிழர்க்கு மதமிருந்திருக்காது, மூட நம்பிக்கைகள் இல்லாத, பிரிவினைகள் அற்ற முற்போக்கு நாகரிகம் என்று கூறுவதெல்லாம். Localizedஆக கீழடியில் பிரிவினைகள் இல்லாமல் இருந்திருக்கலாம்.

ஒரு நதிக்கரை நாகரிகமாக, முழுவதுமாக பல siteகள் கிடைக்கும் போது தான் அனைத்தும் தெரிய வரும். மிகப் பெரிய அளவில் பன்னாட்டு வணிகம் சார்ந்து வளர்ந்த IVC நகரங்களிலேயே மிகக் கடுமையான வர்க்க பேதங்கள் இருந்ததற்கான ஆராய்ச்சி முடிவுகளை விவாதித்துக் கொண்டிருக்கின்றனர்.

கீழடி IVCயுடன் தொடர்புடையது என்று தற்போது இவர்கள் கூறுவதைக் கணக்கில் கொண்டால், மதமும் பிரிவினைகளும் இல்லாமல் இருந்திருக்க Highly impossible. சுரண்டலற்ற பிரிவினைகளற்ற சமத்துவ முற்போக்கு சமூகம் என்பது இவ்வுலகில் மட்டுமல்ல, Old worldலும் utopian விசயம் தான்.