கலெக்டராக வேண்டும் என வெறி! ஆக்சிஜன் சிலிண்டருடன் தேர்வு எழுதிய மாற்றுத் திறனாளி பெண்!

கேரளாவை சேர்ந்த அன்சாரி என்ற பெண் பிறவியிலேயே எலும்பு நோயினால் பாதிக்கப்பட்டு எலும்புகள் வளர்ச்சியடையாத நிலையில் மருத்துவர்களிடம் சென்று பார்த்தபோது அவருக்கு ஃபுல்மோனரி ஹைபர்டென்ஷன் என்ற எலும்பு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


இந் நிலையில் சிகிச்சை பெற்று வரும் அவர் அரசுப் பணியாளர் தேர்வுக்குழு தன்னை தயார் படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று நடந்த சிவில் சர்வீஸ் தேர்வில் பங்கு பெற்றார். இதில் வீல் சேர் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர் உடன் தேர்வு எழுத  வந்துள்ளார். இதனை அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

இவருடன் செகின் என்பவரும் தேர்வு எழுத வந்துள்ளார் அவரால் நடக்க முடியாத நிலையில் அவரும் நடைபயிற்சி செய்யும் உபகரணத்தை கொண்டு நடந்து வந்து தேர்வு எழுதியுள்ளார். அவரிடம் இது குறித்து கேட்டபோது தான் மூன்றாவது முறையாக அரசு பணியாளர் தேர்வு எழுத வந்து உள்ளதாக தெரிவித்துள்ளார். அன்சாரி இதுதான் முதல் முறை எனவும் தெரிவித்துள்ளார்.கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரயில் நிலையத்தில் உள்ள இலவச wi-fi யை பயன்படுத்தி ஒரு நபர் அரசு பணியாளர் தேர்வு எழுதியுள்ளது அனைவரிடமும் அதிசயமாக பேசப்பட்டு வந்துள்ளது. தற்போது இது உன் ஆச்சரியத்துடன் பார்க்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து லத்திஷா அன்சாரி என்பவரிடம் கேட்டபோது தனக்கு பிறவியிலேயே எலும்பு நோய் ஏற்பட்டது பின்னர் உடலில் உள்ள பாகங்கள் அனைத்தும் வளர்ச்சியுறாத நிலையில் வீல் சேர் உதவியுடன் மட்டுமே தான் வளர்ந்து வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவர் தற்போது மருத்துவ சிகிச்சையில் உள்ளதால் மருத்துவர்கள் அவரை முதலில் தேர்வு எழுதி செல்ல அனுமதிக்கவில்லை பின்னர் அன்சாரி பணிவுடன் கேட்டுக் கொண்டபோது அனுமதித்துள்ளனர். இந்நிலையில் அவருக்கு ஆக்சிசன் சிலிண்டரையும் வீல் சேர் உடன் இணைத்துள்ளனர். அதைப் பயன்படுத்தி தான் இந்த தேர்வை எழுதி உள்ளதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். நீ அறிந்து கனடா மருத்துவர் ஒருவர் அவருக்கு வீல் சேரை பரிசாக கொடுத்துள்ளார்.

 இதுகுறித்து அவரது பெற்றோர்களும் கேட்டபோது தன் மகள் வணிகவியல் துறையில் மாஸ்டர் பட்டம் பெற்றுள்ளதாகவும். தன் மகள் பள்ளியில் பயின்று கொண்டிருக்கும் போது அந்தப் பள்ளியில் உள்ளவர்கள் தன் மகளை தொடர்ந்து பள்ளிக்கு வர வேண்டாம் என கூறியுள்ளனர். இதையடுத்து அவர் வேறு ஒரு பள்ளிக்கு மாற்றப்பட்டு உள்ளார் எனவும் அவருக்கு நல்ல முறையில் ஆசிரியர்கள் கல்வி கற்று கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்  அன்சாரி கண்ணாடியில் ஓவியம் வரைவதில் புகழ் பெற்றுள்ளார். இந்த ஓவியத்தின் மூலம் கேரள முதலமைச்சரிடம் விருதும் பெற்றுள்ளார் அன்சாரி. இவர் அருமையாக கீபோர்டும் வாசிப்பார் எனவும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். அப்போது அவர் ஒரு வங்கியில் வேலை செய்து வருவதாகவும், தன் மகளின் கனவு அரசு பணியாளர் தேர்வில் வெற்றி பெற்று அரசு வேலைக்கு போகவேண்டும் என்பதே, கூடிய விரைவில் நிறைவேறும் எனவும் அவரது பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.