பெண் போலீஸ் அதிகாரி நடு ரோட்டில் உயிரோடு எரித்துக் கொலை! சக போலீஸ் அதிகாரி வெறிச் செயல்!

32 வயதான பெண் போலீஸ் அதிகாரி பட்டப்பகலில் பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.


கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள மேவேலிக்கரை காவல் நிலையத்தில் பணியாற்றி வருபவர் 32 வயதான சவுமியா. இவர் இன்று பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். வள்ளிக்குன்னம் எனும் இடத்தில் அவரது பைக் மீது ஒரு கார் பயங்கர வேகத்தில் மோதியது.

இதனால் நிலை குலைந்த சவுமியா பைக்கில் இருந்து கீழே விழுந்தார். அப்போது காரில் இருந்து சக போலீஸ் அதிகாரியான அஜாஸ் இறங்கியுள்ளார். அவரை பார்த்ததும் சவுமியா ஏன் இப்படி செய்தார் என்று கேட்டபடியே எழ முயற்சித்துள்ளார். அப்போது அஜாஸ் தான் கையில் வைத்திருந்த பெட்ரோலை சவுமியா மீது ஊற்றியுள்ளார்.

மேலும் சவுமியா சுதாகரிப்பதற்குள் தீயை கொளுத்தி அவர் மீது போட்டுள்ளார். இதனால் சவுமியா உடல் பற்றி எரிந்துள்ளது. கதறியபடியே சவுமியா உதவி கோர யாரும் முன்வரவில்லை. அதே சமயம் சவுமியா தீ எரிந்த நிலையிலேயே அஜாசை கட்டிப்பிடித்துக் கொண்டார். பின்னர் அஜாஸ் அவரிடம் இருந்து தப்பியுள்ளார்.

இந்த சம்பவத்தில் சவுமியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயம் அடைந்த அஜாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த சவுமியாவுக்கு திருமணமாகி கணவர் வெளிநாட்டில் உள்ளார். மூன்று குழந்தைகள் அவர்களுக்கு உள்ளனர். இந்த நிலையில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.