பெருக்கெடுத்த ஆற்றுவெள்ளம்! கர்ப்பிணிப் பெண் கயிறு கட்டி மீட்கப்பட்ட பரபரப்பு நிமிடங்கள்! வீரர்களுக்கு ஒரு சல்யூட்!

மாநிலத்தில் கனமழை வெள்ளம் தொடர்ந்து வரும் நிலையில் பவானி ஆற்றங்கரையில் வசித்து வந்த ஒரு குடும்பத்தினரை மீட்புக்குழுவினர் ஆற்றின் மீது கயிற்றை கட்டி பரபரப்பு வீடியோ வெளியாகி உள்ளது


பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி  என்ற இடத்தில் பவானி ஆற்றங்கரையில் உள்ள வீடுகளில் பல குடும்பங்கள் வசித்து வந்தன கேரள மாநிலத்தில் தொடர் கனமழை காரணமாக பவானி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுக்க நிலையில் அந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களை மீட்பு குழுவினர் கயிறு கட்டி மீட்டனர்

இந்நிலையில் மீட்பு குழுவினருக்கு சவாலாக அமைந்தது ஒரே ஒரு குடும்பத்தை மீட்பதுதான். அந்த குடும்பத்தில் குடும்பத் தலைவர் கருவுற்ற அவரது மனைவி ஒன்றரை வயது குழந்தை அவரது தாய் தந்தை ஆகியோர் உள்ளனர்.

இந்நிலையில் பவானி ஆற்று வெள்ளத்தின் நடுவே அவர்களின் உயிரை பணயம் வைக்க அவர் விரும்பவில்லை. ஆகவே அந்தக் குடும்பத்தினருக்கு தைரியம் கொடுத்து அவர்களை மீட்டு வெளியே கொண்டு வருவது மீட்புக் குழுவினருக்கு சவாலாக இருந்தது.

இதை அடுத்து மீட்புக் குழுவைச் சேர்ந்த ஒருவர் ஆற்றின் நடுவே நீந்தி சென்று அந்த வீட்டை அடைந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுக்கு தைரியம் கொடுத்து மீட்புக் குழுவினருக்கு அந்த குடும்பத்தினர் ஒத்துழைப்பு கொடுப்பதை உறுதிப்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் தொடங்கின. தனது ஒன்றரை வயது குழந்தையை தனது மார்போடு அணைத்து துணிகளால் இறுகக் கட்டிக் கொண்ட குடும்பத் தலைவரை கயிறு கட்டி பவானி ஆற்றின் மீது மெதுவாக இழுத்து முதலில்  மீட்புக்குழுவினர் காப்பாற்றினர்.

அதனைத் தொடர்ந்து அந்த குடும்பத் தலைவரின் பெற்றோரை அதே முறையில் காப்பாற்றினார். அடுத்தபடியாக கர்ப்பிணி பெண் அவரது உடல் நலமும் பாதிக்கப்படாமல் அவருக்கு அச்சமும் ஏற்படாத வகையில் அவரை மீட்டு கொண்டு வருவது சவாலானதாக இருந்தது.

சுமார் எட்டு நிமிட பரபரப்பான மீட்பு நடவடிக்கைக்கு பின்னர் கயிறு மூலம் அவர் ஆற்றின் மறு கரைக்கு கொண்டு வரப்பட்டார் அங்கிருந்தவர்கள் எடுக்கப்பட்ட வீடியோ தற்போது செய்திகள் பரவி வருகிறது.