33வயது பெண்ணை கர்ப்பமாக்கி கம்யூனிஸ்ட் தலைவர் மகன் செய்த தகாத செயல்!

மும்பை: சிபிஎம் கட்சியின் முக்கிய தலைவரின் மகன் பலாத்கார வழக்கில் சிக்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) ஆட்சி நடக்கிறது. அக்கட்சியின் பொதுச் செயலாளராக  கொடியேறி பாலகிருஷ்ணன் உள்ளார். இந்நிலையில், கொடியேறி மகன் பினாய் வினோதினி பாலகிருஷ்ணன் மீது பிகாரை சேர்ந்த 33 வயது பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் அளித்துள்ளார். மது விடுதியில் நடனமாடி வந்த அப்பெண், பினாய் மூலமாக, தனக்கு ஒரு குழந்தை பிறந்துவிட்டதாகவும், குறிப்பிட்டிருக்கிறார். 

இதுபற்றி பினாய் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், அந்த பெண் தெரிந்தவர்தான் என்றாலும், இது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்றும் அவர் கூறியிருக்கிறார். 2008ம் ஆண்டே திருமணமாகிவிட்ட நிலையில், என் மீது இப்போது திடீரென பாலியல் புகார் கிளப்புவதும், அதை வைத்து பல கோடி ரூபாய் பணம் கேட்பதும், புரியாத மர்மமாக உள்ளது, என்றும் பினாய் குறிப்பிட்டுள்ளார். 

இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட பெண் மீது ஏற்கனவே பினாய் கன்னுர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதேசமயம், குறிப்பிட்ட பெண்ணின் புகாரின் பேரில், பினாய் மீது மும்பை ஓஷிவாரா போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். துபாயில் ஒரு மது விடுதியில் அந்த பெண் நடனமாடியபோது, இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாகக கூறப்படுகிறது. எனினும், இந்த விவகாரம் கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.