பள்ளிக்கூட வகுப்பறையில் 6 அடி நீள விஷப் பாம்பு! தெரியாமல் நின்ற மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்! அதிர்ச்சி சம்பவம்!

கேரளவில் வயநாடு பகுதியில் உள்ள பள்ளியில் தொடர்ந்து மாணவர்களைப் பாம்பு கடிக்கும் சம்பவம் பெற்றோர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.


கேரளா மாநிலத்தில், வயநாடு மாவட்டம் பத்தேரி அரசுப் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. கடந்த 22-ம் தேதி அன்று, இப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்த மாணவி தான் ஷஹலா ஷெரினை பாம்பு கடித்தது. மாணவி வகுப்பறையில் பாம்பு கடித்த நிலையில், மாணவியை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டதால் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

 இந்நிலையில், திருச்சூர் மாவட்டம் சாலக்குடி சி.எம்.ஐ கார்மல் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவனை பாம்பு கடித்துள்ளது. இந்த சோக வடு மறைவதற்குள் மீண்டும் இந்த நிகழ்வு நிகழ்ந்துள்ளது.

மாணவன் ஜெரால்டு பள்ளி வளாகத்தில் நின்று கொண்டிருந்த போது பாம்பு ஒன்று மாணவனை கடித்துள்ளது. இதனை அறிந்து பதறி போன ஆசிரியர்கள் உடனடியாக அந்த மாணவனை அங்கமாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அந்த மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவமணையில் சேர்க்கப்பட்ட, மாணவனின் உடலில் பாம்பு கடித்ததற்கான அறிகுறிகளும் காயமும் உள்ள நிலையில், பாம்பின் விஷம் உடலில் பரவவில்லை. மாணவன் தற்போது நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.

இதனிடையே, இந்த சம்பவம் குறிந்து தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள், பள்ளிக்கு சென்று மாணவனைக் கடித்த பாம்பை பிடித்தனர். பள்ளியில் புத்தகங்கள் வைக்கும் அறையில் இருந்து பிடிக்கப்பட்ட அந்தப் பாம்பு அணலி வகையைச் சேர்ந்தது என வனத்துறையினர் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வை அடுத்து, பொது மக்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்களிடையே பெறும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவே பயமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கைக்கு இனங்க, கேரள அரசு தற்போது அனைத்துப் பள்ளிகளிலும் ஓட்டைகளை அடைக்கவும், புதர்களை அழிக்கவும் அரசு துரித நடவடிக்கை எடுத்தது வருகிறது. இந்த நிகழ்வு மக்களியே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்கள், இதனையடுத்து, அச்சம் தவிர்த்து மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அனுபுகிறார்கள்.