இளம் நர்சின் காதை அறுத்த இளைஞன்! பட்டப்பகலில் நட்ட நடு ரோட்டில் அதிர்ச்சி! அதிர வைக்கும் காரணம்!

திருவனந்தபுரம்: கேரளாவில் நர்ஸ் காதை அறுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.


திருவனந்தபுரத்தில் உள்ள ஓல்ட் மெடிக்கல் காலேஜில் செவிலியராக பணிபுரிந்து வருபவர் புஷ்பா (39 வயது). இவரை மர்ம நபர் ஒருவர் கடந்த சில நாட்களாக பின்தொடர்ந்து வந்திருக்கிறார். இந்நிலையில், வழக்கம்போல, காலை 7.10 மணிக்கு அவர் வேலைக்கு புறப்பட்டு சென்றபோது, அந்த நபர் திடீரென அவரை பின்தொடர்ந்துள்ளார். ஓல்ட் மெடிக்கல் காலேஜிற்கும், புஷ்பா தங்கியுள்ள ஹாஸ்டலுக்கும் இடையே குறுகிய தொலைவே இருந்தாலும், ஆள் நடமாட்டம் இல்லாத காலை நேரம் என்பதால், அந்த நபர் அவரை மிக வேகமாக துரத்தியுள்ளார். 

திடீரென புஷ்பாவை நெருங்கிய, அந்த மர்ம நபர் கத்தியை எடுத்து, புஷ்பாவின் ஒரு காதை அறுத்துவிட்டு, தப்பியோடினார். புஷ்பாவின் அலறல் சத்தம் கேட்டு, அவ்வழியே சென்ற போலீஸ் அதிகாரி, விரைந்து வந்து, அவரை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தார். இதுபற்றி வழக்குப் பதிந்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதில், புஷ்பாவின் காதை அறுத்தவர் பெயர் நிதின் என்றும், 35 வயதான அவர், புஷ்பாவை ரொம்ப நாளாக பின்தொடர்ந்து வந்திருக்கிறார் என்றும் தெரியவந்துள்ளது. கொல்லம் பகுதியில் உள்ள விக்டோரியா ஹாஸ்பிடலில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரியும் நிதின், புஷ்பாவை ஒருதலையாக விரும்பியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். காதை அறுக்கும் அளவுக்கு இருவருக்கும் இடையே எத்தகைய பழக்கம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கின்றனர்.