திருமணத்திற்கு வந்த மொத்த மொய் பணத்தையும் வைத்து புதுக் கணவன்-மனைவி சேர்ந்து செய்த செயல்! நெகிழ்ந்த உறவுகள்!

திருவனந்தபுரம்: மொய் பண்த்தில் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் வாங்கி கொடுத்த புதுமண தம்பதியருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.


இந்தியா முழுவதும், டிசம்பர் 1ம் தேதி முதலாக, இருசக்கர வாகனம் ஓட்டுபவர் மட்டுமின்றி, பின்னால் அமர்ந்து செல்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி, பாலக்காட்டை அடுத்த சிட்டூர் பகுதியை சேர்ந்த புதுமண தம்பதி, தங்கள் திருமணத்திற்கு கிடைத்த மொய் பணத்தில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக ஹெல்மெட் வாங்கி கொடுக்க முன்வந்துள்ளனர்.  

தேவதாஸ், சுருதி எனும் அந்த தம்பதி, திருமணம் முடிந்ததும் மொய்ப் பணத்தை எடுத்துக் கொண்டு, பாலக்காடு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு நேரில் சென்றனர். அங்கு, வட்டார போக்குவரத்து அதிகாரியை சந்தித்து, அவரிடம் மொய்ப்பணத்தை கொடுத்து, வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஹெல்மெட் வாங்கி, அனைவருக்கும் இலவசமாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர்.

இதனை அதிகாரியும் ஏற்றுக் கொண்டார். புதுமண தம்பதி முன்னிலையில் பாலக்காடு பகுதியில் ஆங்காங்கே இலவச ஹெல்மெட் விநியோகம் செய்ய உள்ளதாக, போக்குவரத்து அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.