லாட்டரியில் ரூ.6 கோடி பரிசு! அதில் வாங்கிய நிலத்தில் தங்க புதையல்! அதிர்ஷ்டத்தில் திக்குமுக்காடும் முதியவர்!

கேரளாவில் லாட்டரி மூலம் திடீர் கோடீஸ்வரர் ஆனவருக்கு புதையலும் கிடைத்ததால் மகிழ்ச்சிக் கடலில் நீந்தி வருகிறார்.


திருவனந்தபுரம் அருகே கிளிமானூரை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ரெத்தினாகரனுக்கு லாட்டரி சீட்டு வாங்குவது வழக்கம். வழக்கமாக லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் கொண்ட 60 வயதை கடந்தவருக்கு கடந்த டிசம்பருக்கு முன்னர் வரை பரிசுகள் ஏதும் விழுந்ததாக தெரியவில்லை. கேரள அரசின் கிறிஸ்துமஸ் பம்பர் என்ற லாட்டரி டிக்கெட்டை 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் வாங்கி உள்ளார் ரெத்தினாகரன்.

இதில் அவருக்கு 6 கோடி ரூபாய் பரிசாக விழுந்தது. இதனால் மகிழ்ச்சியில் ஆழ்ந்த ரெத்தினாகரன் திருப்பாற்கடல் கிருஷ்ணசாமி கோயில் அருகே கடனில் இருந்த தன்னுடைய வீட்டை மீட்டார். மீதி பணத்தில் விவசாய நிலமும் வாங்கிவிட்டார். 

இந்நிலையில் விவசாயம் செய்வதற்காக விவசாயத் தொழிலாளர்களை வைத்து நிலத்தை உழுதுகொண்டிருந்தார். மேலும் கிணறு தோண்டும் பணியும் ஆரம்பிக்கப்பட்டது. சுமார் 5 அடி வரை பள்ளம் தோண்டிய நிலையில் புதையல் போல ஏதோ தென்பட்டுள்ளது. இதனால் ஆச்சரியமடைந்த ரெத்தினாகரன் அது என்னவென்று பார்க்க பழங்காலத்து மண் பானைகள் இருந்தது.

மேலும் தோண்டியதுபோது 6 பானைகள் கிடைத்தது. அதில் அந்தக் காலத்து செப்பு நாணயங்கள் இருந்ததை பார்த்து மகிழ்ச்சி அடைந்தார். நிலம் நமதாக இருந்தாலும் அதில் இருக்கும் புதையல் அரசாங்கத்தையே சேரும் என்பதால் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் வந்து பார்த்ததில் 6 மண் பானைகளில் 2,600 செப்பு நாணயங்கள் இருந்துள்ளது.

பின்னர் அது கைப்பற்றப்பட்டு தொல்லியல் துறைக்கு அனுப்ப காவல்துறையால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் நமக்கு தெரியவந்தது புதையல் மூலம் ரெத்தினாகரனுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்பதுதான்.