கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் மகனுக்காக மினி ராயல் பீல்டு பைக்கை தந்தை ஒருவர் வீட்டிலேயே உருவாக்கி தந்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது.
ஆசைப் பட்ட மகன்! மினி ராயல் என்பீல்டு செய்து கொடுத்து நெகிழ வைத்த தந்தை! அப்பா பாசம்னா இது தான்..!
5 வயது உடைய சிறுவன் தற்போது மினி ராயல் என்பீல்டு புல்லட் மோட்டார் சைக்கிளை ஜாலியாக ஓட்டி வருகிறார். அந்த வாகனம் நிஜ ராயல் என்பீல்டு புல்லட் மோட்டார் சைக்கிளை போன்றே இருக்கிறது. இதற்காக தந்தை கடினமாக உழைத்து உள்ளார் என்பது இதில் இருந்தே தெரிகிறது.
பைக்கிற்கு தேவையான அனைத்து பாகங்களும் வீட்டிலேயே அசெம்பிள் செய்யப்பட்டுள்ளன. பேட்டரி மூலம் இயங்க கூடிய இந்த பைக் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாது. உண்மையான ராயல் என்பீல்டு புல்லட் பைக்கை போன்றே, ஹெட்லேம்ப், இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் சஸ்பென்ஸன், இன்டிகேட்டர்கள், மிரர்கள், லெக் கார்டு போன்ற வசதிகள் இந்த பைக்கில் இடம் பெற்றுள்ளன.
ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், தோராயமாக 30 நிமிடங்கள் வரை பயன்படுத்த கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பைக்கை பரிசாக பெற்றுள்ள சிறுவனுக்கு 5 வயதுதான் இருக்கும். மகனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக மிக சரியான தீர்வை கண்டுபிடித்ததுடன், அதனை அருமையாக செயல்படுத்தியும் உள்ளார் அந்த தந்தை.
தனது கனவை நிறைவேற்ற உதவும் மிகச்சிறந்த தந்தையை அந்த சிறுவன் பெற்றிருப்பதாக நெட்டிசன்கள் தற்போது பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தந்தை பரிசளித்த மினி ராயல் என்பீல்டு புல்லட் எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிளை சிறுவன் ஓட்டும் வீடியோ காட்சியும் வெளியாகியுள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பைக் வரும் ஆண்டுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.