பிறக்கும் போதே 2 கைகளும் கிடையாது! கால்களால் தேர்வெழுதி மாணவி படைத்த மகத்தான சாதனை!

கேரளாவில் பிறக்கும் போதே கைகளை இழந்த மாணவி கால்களினால் பேனாவை பிடித்து பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியதில், அனைத்து பாடங்களிலும் முதன்மை வகிப்பது கேட்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது எனலாம்.


கேரள மாநிலத்தில் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவ் தென்கிப்பாலம் காவல்துறையின் மூத்த காவல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார், மனைவி சுஜிதா இல்லத்தரசி, இவர்களது மகள் தான் ஒட்டு மொத்த கேரளாவும் கொண்டாடும்  தேவிகா, பிறக்கும் போதே கைகள் இழந்தவர், எனினும் தாய் சுஜிதாவின் ஊக்கம் மற்றும் ஒத்துழைப்பினால் கால் விரல்களில் பேனாவை பிடித்து எழுத பழகியவர்.

பள்ளி பருவத்தில் ஆரம்ப காலங்களில் சிரமப்பட்ட தேவிக்கா பின்னர், அனைவரும் மெச்சிக்கொள்ளும் அளவிற்கு படிப்பில் கெட்டிக்காரியானார்.இந்த நிலையில் இந்த ஆண்டிற்க்கான பத்தாம் வகுப்பு தேர்வின் முடிவுகள் சில வாரங்களுக்கு முன்பு வெளியான போது அனைத்து பாடங்களிலும் A+என குறிப்பிடும் அளவிற்கு முதன்மை இடத்தை தட்டி சென்றார் தட்டிசென்றார்.

மலையாளம், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் புலமை கொண்ட தேவிகா, சமூக செயல்பாடுகளின் மீது கொண்ட நாட்டத்தின்பாற் தனது 11 ஆம் வகுப்பில் மனித நேயம் குறித்த படிப்பை தேர்வு செய்திருக்கிறார்.

தேவிகாவின் அசாத்திய சாதனைக்காக நேற்று கேரள காவல்துறை சார்பில், லோக்னாத் பெக்ரே பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்த போது, தேவிகாவின் மன உறுதியும், தன்னம்பிக்கையும் தான் அவரை இந்த சாதனைக்கு சொந்தமாக்கியது என பெருமிதம் கொண்டார்.

தேர்வை எதிர்கொள்ள முடியாமல் , தற்கொலை முடிவுக்கு செல்லும் மாணவ, மாணவியருக்கு தேவிகா சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துவிட்டார்.