கேரள மாநிலத்தில் சக போட்டியாளரால் சுத்தியலால் தாக்கப்பட்ட தடகள வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திடீரென பறந்து வந்த சுத்தியல்..! ரத்தம் சொட்ட சொட்ட துடித்த மாணவன்..! கல்லூரி மைதானத்தில் அரங்கேறிய பயங்கரம்!

கேரள மாநிலம் கோட்டயம் அருகே பாலாவில் 63வது கேரள மாநில ஜூனியர் தடகள போட்டி நடைபெற்றது. இதில் செயின்ட் தாமஸ் மேல்நிலைப்பள்ளியின் மாணவர் அபீல் ஜான்சன் உள்ளிட்டோர் பங்கற்றனர். தடக போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சக போட்டியாளரால் சுத்தியலால் தாக்கப்பட்டார் அபீல் ஜான்சன்.
இதனால் அவர் நிலைகுலைந்து விழுந்தார். பின்னர் அவர் கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சுமார் 3 கிலோ எடையுள்ள சுத்தியலால் தாக்கப்பட்டதால் படுகாயமுற்ற ஜான்சனுக்கு தீவிர சிகிச்சை பிரவில் 2 அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் சிறிது சிறிதாக குணமடைந்து வர அவர் சாதாரண வார்டுக்கு மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
எனினினும் மீண்டும் ஜான்சன் உடல்நிலை மோசமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். ஜான்சனின் குடும்பத்தார் எவ்வளவு பிரார்த்தனை செய்தும் அது பலனளிக்கவில்லை. இதுகுறித்து கோட்டயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஜான்சன் மீது சுத்தியலால் தாக்கிய மாணவரை தேடிவருகின்றனர்.
விளையாட்டு போட்டி என்பதே உடல் ஆரோக்கியத்தை வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் அதில் வெற்றி பெற்றால்தான் கவுரவம் என நினைக்கும் சில மாணவர்கள் இதுபோல் முட்டாள்தனத்தை செய்து விடுகின்றனர்.