புத்தகப் பையில் பச்சிளம் குழந்தை! பாத்ரூமில் பிரசவித்து கல்லூரி மாணவி செய்த பகீர் செயல்! அதிர வைக்கும் சம்பவம்!

கேரளாவில் கல்லூரி மாணவி ஒருவர் திருமணத்திற்கு முன்பே தனக்கு பிறந்த குழந்தையை புத்தகப் பையில் மறைத்து வைத்திருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கேரளா மாநிலம் இடுக்கியில் உள்ள தனியார் கல்லூரியில் வாத்திகுடி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் படித்து வந்துள்ளார். இந்நிலையில் அதே கல்லூரியில் பயின்ற மற்றொரு மாணவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து இருவரும் பல நாட்கள் தனிமையில் இருந்துள்ளதாக தெரிகிறது இதன் விளைவாக அந்த மாணவி கர்ப்பமாக ஆகியுள்ளார்.

இந்நிலையில் தான் கர்ப்பமானதை வீட்டில் கடந்த ஆறு மாதமாக மறைத்து வந்துள்ளார். இந்நிலையில் தான் காதலித்து வந்த இளைஞர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் பின்னர் சில நாட்கள் கழித்து அந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து கருவை கலைக்க முயன்ற மாணவி மருத்துவமனைக்கு சென்றபோது கருவை கலைக்க முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தனது பெற்றோர்களுக்கு தெரியாமல் இவ்வளவு நாள் இருந்து வந்துள்ளார்.  

இதையடுத்து திடீரென ஒரு நாள் உறவினர் ஒருவருக்கு தனக்கு குழந்தை பிறந்து விட்டதாகவும் குறை பிரசவம் என்பதால் குழந்தை இறந்து பிறந்ததாகவும் அதை மறைப்பதற்காக தனது புத்தகப் பையில் பிளாஸ்டிக் கவர் கொண்டு மறைத்து வைத்துள்ளதாக வாட்ஸ்அப் மூலம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து உடனே அறிந்த உறவினர்கள் வாத்திகுடி காவல் நிலையத்திற்கு புகார் கொடுத்துள்ளனர். இந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அப்பெண்னிடம் இருந்த பையை பார்த்தபோது அதில் பிளாஸ்டிக் சுற்றப்பட்டு பச்சிளம் குழந்தை இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ந்தனர்.

இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்திய காவல்துறையினரிடம் இளம்பெண் கூறியதாவது நான் கர்ப்பமாக இருப்பதை பெற்றோருக்கு தெரிவிக்காமல் பல நாட்கள் மறைத்து வந்ததாகவும் தற்போது அதை மறைக்க முடியாமல் கழிவறையில் சென்று குழந்தை பெற்றெடுத்து கொண்டதாகவும் அப்பெண் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்நிலையில் கொலை குற்றப் பிரிவின் கீழ் அப்பெண்ணை கைது செய்த காவல்துறையினர் அவரை சிகிச்சைக்காக இடுக்கி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். படிக்கும் வயதில் காதலென சுற்றித்திரியும் இளைஞர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.