கொரோனா எதிர்ப்பு நடவடிக்கையில் கெத்து காட்டும் கேரள முதல்வர்..! களத்தில் இறங்கும் இளைஞர் படை

கொரோனா பாதிப்பு கேரளாவில் அதிகம் என்றாலும், அதனை தடுத்து நிறுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை கேரள முதல்வர் பினராயி விஜயன் எடுத்துவருகிறார். இதற்காக இளைஞர் படை களத்தில் இறங்குவதுதான் புதுசு.


22 மற்றும் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் அடங்கிய ஒரு தன்னார்வ தொண்டர் படையை ஏற்படுத்தும் முயற்சி நடக்கிறது. அதன்படி, 2,36,000 பேர் அடங்கிய தொண்டர் படை களத்தில் இறக்கப்படுவார்கள். கேரளாவிலுள்ள 941 பஞ்சாயத்துகளில் தலா 200 பேர் வீதமும், 87 நகரசபைகளிக் தலா 500 பேர் வீதமும் இருப்பார்கள்.

இளைஞர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் முன்வர வேண்டும் என்றும் இவர்கள் பல்வேறு பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. உணவு மற்றும் உணவுப் பொருட்களை வீடுகளுக்கு சென்று வழங்குவது, மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உதவியாக தங்கியிருக்க வேண்டும்.

 இவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் இவர்களுக்கான பயணச் செலவை உள்ளாட்சி அமைப்புகள் வழங்கும். மருத்துவமனைகளில் நோயாளியுடன் இருப்பதற்காக இளைஞர் ஆணையம் ஒருநாளில் 1465 பேர் அடங்கிய குழுவை ஏற்படுத்தி உள்ளது. அதற்கான பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது.

கேரளாவில் உள்ள 879 தனியார் மருத்துவமனைகளில் உள்ள 69,434 படுக்கைகளும், 5607 அவசர சிகிச்சைப் பிரிவுகளும், 716 விடுதிகளில் உள்ள 15,333 அறைகளையும் பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு கிராமத்தையும் இளைஞர் படை கையில் எடுத்துக்கொண்டால், கொரோனாவுக்கு அங்கு வேலை இல்லையே…