100 நாளில் காதல்! 101வது நாளில் திருமணம்! ஒரு மாநிலமே கொண்டாடும் காதல் ஜோடி!

பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் நிகழ்வுகள் அந்நிகழ்ச்சியை பிரபலப்படுத்துவதற்காக போலியாக நடிப்பதில்லை என மலையாள பிக்பாஸ் முதல் சீசனில் இருந்து வெளியேறிய போட்டியாளர் பியர்லி மானி.


ஒரு வீட்டிற்குள் கதையே இல்லாமல் எவ்வளவு நாள்தான் நடிக்கமுடியும் என்று கூறும் பியர்லி ஆரம்பத்தில் விமர்சனம் செய்தவர்கள் பின்னர் ஆதரவாக மாறியதாக தெரிவித்துள்ளார்.

2018-ல் மோகன்லால் தொகுத்து வழங்கிய மலையாள பிக் பாஸ் முதல் சீசனில் கேரள நிகழ்ச்சித் தொகுப்பாளர் பியர்லி மானி மற்றும் சின்னத்திரை நடிகர் ஸ்ரீனிஷ் அரவிந்த் போட்டியாளர்களாக பங்கேற்றனர். பிக் பாஸ் வீட்டுக்குள் காதல் மலர்ந்த நிலையில் சமீபத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இதுகுறித்து பியர்லி மானி தெரிவித்தபோது ஸ்ரீனிஷூம் நானும் நண்பர்களாக இருந்தோம். எங்களுக்குடையே இருந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியதாக தெரிவித்தார். மேலும் தான்தான் முதலில் ஸ்ரீனிஷூடம் காதலை தெரிவித்ததாகவும் கூறுகிறார் பியர்லி.

பின்னர் பேசிய ஸ்ரீனிஷ் தன்னுடைய மனைவி பியர்லி அதிக ஜங்க் உணவுகள் சாப்பிடுவார் என்றும் அது மட்டும்தான் எனக்கு பிடிக்காது என்றும் தெரிவித்தார்.

கார்ட்டூனில் வருவது போல நாங்கள்தான் கதாநாயகர்கள் என்று கூறும் பியர்லி ஸ்ரீனி தம்பதி அடுத்துவர்களுக்கு இடையூறு தருபவர்கள் வில்லன்கள் என்கிறார்கள். நம் கண் எதிரே தப்பு நடந்தால் தட்டிக் கேட்க வேண்டும் என்றும் அதேபோல நாம யாருக்கும் எந்தத் தொல்லையும் கொடுக்கக் கூடாது என்றும் தெரிவிக்கின்றனர்.

100 நாட்கள் பழக்கம் காதலானதாகவும், 101வது நாளில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து தற்போது அனைத்தும் சுபமாக நடந்துவிட்டதாகம் கூறி சிரிக்கிறார்கள். இவர்களின் காதல் திருமணம் தான் கேரளாவில் தற்போது ஹாட் டாபிக். ஒரு மாநிலமே இவர்கள் திருமணத்தை கொண்டாடி தீர்த்துக் கொண்டிருக்கிறது.