திருவனந்தபுரம்: கேரளாவில் பேனர் விழுந்து இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
மீண்டும் ஒரு பேனர் விபத்து..! பைக்கில் சென்றவர் மீது பறந்து வந்து விழுந்த பயங்கரம்! ஹாஸ்பிடலில் உயிருக்கு போராட்டம்!
இடுக்கி மாவட்டத்தில் உள்ள உப்புத்தோடு பகுதியை சேர்ந்த வேழம்பசிரில் ஷிபின் செபாஸ்டியன். 29 வயதாகும் இவர், கரிம்பான் - முரிகாசர் சாலையில் செருதோணி அருகே ஸ்கூட்டரில் சென்றபோது சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து படுகாயம் அடைந்துள்ளார்.
தலை உள்ளிட்ட இடங்களில் காயங்களுடன், ரத்தம் வழிய சாலையில் கிடந்த செபாஸ்டியனை அவ்வழியே வந்த பொதுமக்கள் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே சமீபத்தில் சென்னையில் இளம்பெண் மீது பேனர் விழுந்ததில் உயிரிழந்த சம்பவம் பல தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், மேலும் ஒரு இளைஞர் கேரளாவில் பேனர் விழுந்து காயம்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பேனர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பொதுமக்கள் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.