கணவன் முன்பு மனைவி பலாத்காரம்! திடீர் சைரன் ஒலி! அசத்திய ஆம்புலன்ஸ் டிரைவர்!

கேரளாவில், மர்ம நபரால் தாக்கப்பட்ட தமிழ்ப்பெண்ணை, சைரன் எழுப்பி காப்பாற்றிய ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்குப் பாராட்டு குவிந்து வருகிறது.


திரிசூரில் ,செவ்வாய் நள்ளிரவு, தமிழகத்தைச் சேர்ந்த கணவன், மனைவி சினிமாப்படம் பார்த்துவிட்டு, எம்ஜி ரோடு வழியாக நடந்து சென்றுள்ளனர். அப்போது, அங்கிருந்த மர்ம நபர் ஒருவர் அந்த பெண்ணையும், அவரது கணவரையும் தாக்கியுள்ளார். அங்கே வந்த ஆம்புலன்ஸ் டிரைவர் ஜானிக்குட்டியும், அவரது உதவியாளர் ஷித்தின் இருவரும் இதைப் பார்த்து, காப்பாற்ற சென்றுள்ளனர்.

ஆனால், அந்த மர்ம நபர் கற்களை காட்டி, மிரட்டியுள்ளார்.இதில், ஷித்தினுக்கு விலா எலும்பு உடைந்துள்ளது. எனினும், வலியை பொறுத்துக் கொண்டு, சமயோசிதமாக செயல்பட்ட ஜானிக்குட்டியும், ஷித்தினும் ஆம்புலன்ஸ் வண்டியின் சைரனை ஆன் செய்துள்ளனர்.

இந்த சத்தம் கேட்டதும், உடனே அங்கிருந்த பொதுமக்களும், ரோந்து போலீசாரும் அங்கே ஓடிவந்துள்ளனர். அவர்கள், அந்த பெண்ணையும், அவரது கணவரையும், ஆம்புலன்ஸ் ஊழியர்களையும் காப்பாற்றியதோடு, குறிப்பிட்ட நபரையும் கைது செய்தனர். அந்த நபர் சைக்கோவா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.  சமயோசிதமாக செயல்பட்ட ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பலரும் பாராட்டு தெரிவிக்கின்றனர்.