நெகிழ வைக்கும் புகைப்படம்! தங்களை பாதுகாக்கும் ராணுவ வீராங்கனைக்கு கை கொடுக்கும் காஷ்மீர் சிறுமி!

டெல்லி: சிஆர்பிஎஃப் வீராங்கனையுடன் காஷ்மீர் சிறுவன் புன்னகையுடன் கை குலுக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.


சிஆர்பிஎஃப் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த புகைப்படத்தை பகிரப்பட்டது. அதனை பலரும் தற்போது வைரலாக பகிர்ந்து வருகின்றனர். அதில், சிறுவனும், சிஆர்பிஎஃப் வீராங்கனையும் புன்னகையுடன் கைகுலுக்கிக் கொள்ளும் காட்சி இடம்பெற்றுள்ளது.

இதுபோல எதிர்காலத்திலும் காஷ்மீர் மக்களை பாதுகாப்போம் என்றும், புகைப்படத்தை ஷேர் செய்தவர்களில் ஒரு போலீஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார். 

இதேபோல, மற்றொரு புகைப்படத்தையும் சிஆர்பிஎஃப் வெளியிட்டுள்ளது. அதில், ஒரு சிறுவன், சிஆர்பிஎஃப் பெண் வீரருக்கு சல்யூட் அடிப்பது போன்ற காட்சி உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டு, யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட நிலையில்,அங்குள்ள மக்கள் இந்திய அரசு மீதும், இந்திய படைகள் மீதும் கடும் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால், அதனை மறுதலிக்கும் வகையில் காஷ்மீரில் இயல்பு நிலை நிலவுவதாகக் காட்டும் வகையில் இந்த புகைப்படங்களை சிஆர்பிஎஃப் வெளியிட்டு வருவதாக, சமூக ஊடக பயனாளர்கள் குறிப்பிடுகின்றனர்.