சாகசம்! அசுர வேகம்! கரூர்-திருச்சி நெடுஞ்சாலையில் உயிருக்கு உலை வைக்கும் ரேஸ் சைக்கோக்கள்!

தேசிய நெடுஞ்சாலைகளில் பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சாலையில் அமைந்துள்ள சிறிய ஊர்களில் உள்ள பொதுமக்கள் காவல்துறையினரிடம் மனு கொடுத்துள்ளனர்.


கரூர் -திருச்சி நெடுஞ்சாலை அதிக அளவில் கனரக வாகனங்கள் மற்றும் கோவை ,கொச்சின் துறைமுகம் போன்ற பகுதிகளுக்குச் செல்ல பொதுவான வழித்தடமாக உள்ளது. அதில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவுகளில் இளைஞர்கள் பலர் அந்த சாலையில் பைக் ரேஸில் ஈடுபடுவது மற்றும் சாகசங்கள் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் வேகமாக செல்கையில் குழந்தைகள் யாரேனும் குறுக்கே வந்தாலோ அல்லது கால்நடைகள்  குறுக்கே வந்தாலும் பெரிய விபத்து நடக்க வாய்ப்புள்ளது. என அந்த ஊர் பகுதி மக்கள் காவல்துறையினரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார்.

இந்நிலையில் அந்த மனுவை பெற்ற காவல்துறை ஆணையர் இது குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இரவு நேரங்களில் போலீசார் வாகனங்களை அப்பகுதியில் ரோந்து பணிக்கு அனுப்பப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.