தேர்தலில் படுதோல்வி! ஹோட்டலில் குடித்துவிட்டு முதலமைச்சர் மகன் தகராறு!

சுமலதாவிடம் தோற்ற விரக்தியில், கர்நாடக முதல்வர் குமாரசாமி மகன் நட்சத்திர ஓட்டலில் தகராறில் ஈடுபட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் கவுடா, தற்போது நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில்  மண்டியா தொகுதியில் போட்டியிட்டார். இவருக்காக ஆளுங்கட்சியினரும், காங்கிரஸ் கட்சியினரும் கூட்டணி அமைத்து, தீவிரமாகக் களப்பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், இவருக்கு எதிராக, மறைந்த நடிகர் அம்பரீஷ் மனைவி சுமலதா சுயேச்சையாக களமிறங்கினார். அவருக்காக,  பாஜக வேட்பாளர் யாரையும் அறிவிக்காமல், முழு ஆதரவு அளித்தது. 

கடும் போட்டியுடன், மண்டியா தொகுதியில் வாக்குப் பதிவு நடைபெற்றது. சுமலதா என்ற பெயரில் அம்பரீஷ் மனைவி மட்டுமின்றி, மேலும் 3 பேர் சுயேச்சையாக, ஆளுங்கட்சி சார்பில் களமிறக்கப்பட்டனர். இருந்தும் தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோது, குமாரசாமி குடும்பமே கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்தது. ஆம். அம்பரீஷ் மனைவி சுமலதா 7 லட்சம் ஓட்டுகளுக்கும் மேல் பெற்று, வெற்றி பெற்றார். குமாரசாமி மகனுக்கு 5 லட்சம் ஓட்டுகள்தான் கிடைத்தன.

இந்த அதிர்ச்சி தாங்காமல், நிகில் கவுடா, மைசூர் சென்று ஸ்டார் ஓட்டலில் ரூம் போட்டு அழுதுள்ளாராம். யார் முகத்திலும் முழிக்க விரும்பவில்லை என, குடும்பத்தினரிடம் தெரிவித்துவிட்டாராம். அத்துடன், போதையில் ஓட்டல் ஊழியர்களிடம் நள்ளிரவில் மோதலில் ஈடுபட்டுள்ளாராம். இதுபற்றி, கன்னட நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது. 

அதேசமயம், இத்தகைய தகவல்களை, முதல்வர் குமாரசாமி மறுத்துள்ளார். இதுபற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்து, பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.