கர்நாடக மாநிலத்தில் சட்டசபை கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது அங்கு தனது மொபைல் போனில் ஆபாச படம் பார்த்து சர்ச்சையில் சிக்கிய ஒருவருக்கு தற்போது துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்த்து சிக்கிய எம்எல்ஏ! துணை முதலமைச்சராக பதவி ஏற்ற கொடுமை!

கர்நாடக மாநிலத்தில் லக்ஷ்மன் சவதி, கோவிந்த் கர்ஜோல் மற்றும் அஸ்வந்த் நாராயணன் ஆகிய மூவரும் தற்போது துணை முதலமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாஜக எம்.எல்.ஏ ஒருவர் இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இதை ஏற்றுக்கொள்ள மறுத்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். சட்டசபையில் கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட லக்ஷ்மன் சவதி என்பவர் சட்டசபை கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது தனது செல்போனில் ஆபாச படம் பார்த்ததாக சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இந்நிலையில் அவர் அப்போது வகித்த அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்ய அரசு பரிந்துரை செய்தது. இதையடுத்து அவரும் தனது பதவியை பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.
இந்நிலையில் பிறகு நடைபெற்ற எந்த ஒரு தேர்தலிலும் வெற்றி பெறாத லக்ஷ்மன் சவதிக்கு தற்போது துணை முதலமைச்சர் பதவி கொடுத்தது பல்வேறு அரசியல் தலைவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் பாஜக எம்எல்ஏ வானம் ரேணுகாச்சார்யா இது தொடர்பாக கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்.
இதுயடுத்து துணை முதலமைச்சராக பதவியேற்ற லக்ஷ்மன்ர சவதி கூறியதாவது தேசிய மற்றும் மாநில தலைவர்கள் மீது நம்பிக்கை வைத்து கேட்காமலேயே துணை முதலமைச்சர் பதவியை கர்நாடக அரசு வழங்கியதாக தெரிவித்திருந்தார்.
காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா கூட்டணி அரசை வீழ்த்துவதில் லக்ஷ்மன் சவதி முக்கிய பங்கு வகித்ததால் அவருக்கு இந்த துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.