அதிகாலை 2 மணி! கண் அயர்ந்த டிரைவர்! நேருக்கு நேர் மோதி உருக்குலைந்த கார்கள்! உறக்கத்திலேயே 4 பேருக்கு நேர்ந்த விபரீதம்!

கர்நாடக மாநிலத்தில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதி உருக்குலைந்ததில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.


கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்திற்கு உட்பட்ட கல் எனும் கிராமத்தில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. நேற்று அதிகாலை 2 மணியளவில் எதிர் எதிரே வந்த 2 கார்களும் விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. ஒருவேளை இரண்டு ஓட்டுநர்களுமே அதிகாலை என்பதால் தூக்கக் கலக்கத்தில் வண்டி ஓட்டியதால் விபத்து நடந்திருக்கலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர்.

உருக்குலைந்து போன இரண்டு கார்களையும் ஜேசிபி இயந்திரம் மூலம் அப்புறப்படுத்திய போலீசார் விபத்தில் உயிர் இழந்த உடல்களை உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனை அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 6 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஒரு காரில் வந்த 3 பேரும் எதிர் காரில் வந்த ஓட்டுநரும் இந்த விபத்தில் உயிரிழந்தனர். மேலும் இது குறித்து தெரிவித்த போலிசார் விபத்தில் சிக்கியவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என முதற் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறினர். தேசிய நெடுஞ்சாலை காலியாக இருக்கிறது என்பதற்காக இரவு முழுவதும் வாகனம் ஓட்ட வேண்டிய அவசியம் இல்லை. சிறிது நேரம் இளைப்பாறிவிட்டு வாகனம் ஓட்டினால் உடலுக்கும், கண்ணுக்கும் ஓய்வு கிடைக்கும்.

பின்னர் செல்ல வேண்டிய இடத்திற்கு பத்திரமாக செல்லலாம். இல்லையெனில் செல்ல விரும்பாத இடத்திற்குத்தான் செல்லவேண்டிய நிலை ஏற்படும்.