SDPI, பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புகளுக்கு விரைவில் தடை..? முதலமைச்சர் எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கை! ஏன் தெரியுமா?

பெங்களூரு: எஸ்டிபிஐ, பிஎஃப்ஐ போன்ற இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்ய கர்நாடகா அரசு தீர்மானித்துள்ளது.


கர்நாடகா உள்துறை அமைச்சர் பசவராஜ் இதுபற்றிய தகவலை வெளியிட்டுள்ளார். அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில், ''கர்நாடகாவில் நடந்த ஏராளமான இந்து அமைப்பினர் கொலை வழக்குகளில் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் நேரடியாகவே சம்பந்தப்பட்டுள்ளனர். சமீபத்தில், காங்கிரஸ் எம்எல்ஏ தன்வீர் சையதுவை கொலை செய்ய முயற்சி நடந்தது.

அதிலும் எஸ்டிபி கட்சிக்கு தொடர்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. சிமி தீவிரவாத அமைப்பு தடை செய்யப்பட்ட நிலையிலும், எஸ்டிபிஐ, பிஎஃப்ஐ போன்ற அமைப்புகளின் உதவியுடன் தீவிரவாதிகள் வெளிநாடுகளின் ஆலோசனைப்படி இந்தியாவில் தீவிரவாத செயல்களை திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர்.

இவர்களின் தீவிரவாத செயலுக்கான முழு ஆதாரம் கிடைத்ததும், மத்திய அரசுக்கு அனுப்பி வைப்போம். அவர்கள் பரிசீலனை செய்து எஸ்டிபிஐ, பிஎஃப்ஐ போன்ற அமைப்புகளை தடை செய்ய நடவடிக்கை எடுப்பார்கள்,'' எனக் குறிப்பிட்டுள்ளார். அமைச்சரின் பேச்சால் இஸ்லாமிய அமைப்புகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளன.