வாடகை பாம்புக்கு பாலாபிஷேகம்..! அம்மன் மீது பலியை தூக்கி போட்ட கபிலா அம்மன்! பிடிச்சு உள்ளே போட்ட போலீஸ்! அதிர்ச்சி காரணம்!

காஞ்சிபுரத்தில் வாலாஜாபாத்தில் பாம்பை வைத்து வித்தை காட்டி ஓவர் நைட்டில் பிரபலமான பெண் சாமியார் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


காஞ்சிபுரம் அடுத்த உள்ள வாலாஜாபாத்தில் பெண் சாமியார் ஒருவர் பாம்பை கழுத்தில் அணிந்து கொண்டு பக்தர்களுக்கு வட பத்திரகாளியம்மன் அருள் வாக்கு சொல்லி வருவதாக கூறி வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டு உள்ளார், இந்த விடியோ காட்சிகள் வைரலானது , இதன் காரணமாக அருள் வாக்கு பெண் சாமியார் கபில அம்மையார் பிரபலமானர்.  

மற்ற சாமியார்கள் போன்று இல்லாமல் சற்று வித்தியாசமாக கபில அம்மையார் , கோவிலின் கும்பாபிசேகத்தின் போது 2 பம்புகளை வாடகைக்கு எடுத்து அதற்கு பூ தூவி பூஜை செய்ததோடு, பாம்புக்கு மூச்சு தினறும் அளவுக்கு பால் அபிசேகம் செய்து அந்த பாம்பை பாலில் மிதக்க விட்டுள்ளார்.

பாம்பை துன்புறுத்துவோடு மட்டும் அல்லாமல் சிலைகளின் மீது பாம்பை விட்டு தனது கோவில் விளம்பரத்திற்காகவும் அதிக பக்தர்களை வரவைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பாம்பாட்டியின் உதவியுடன் பாம்பை தனது கழுத்தில் சுற்றிக் கொண்டு பக்தர்களுக்கு அம்மன் போல காட்சி தந்துள்ளார் கபிலா.

மேலும், பாம்புகளை துன்புறுத்தி காட்சிகளாக படமாக்கியதோடு, அதனை யுடியூப்பிலும் இரு தினங்களுக்கு முன்னதாக பதிவேற்றம் செய்துள்ளார். இது தொடர்பாக செய்தி வெளியானதை தொடர்ந்து, வனத்துறையினர் தகவல் அறிந்து பாம்புகளை சட்ட விரோதமாக அடைத்து வைத்து சித்ரவதை செய்ததோடு, பாம்புகளை வைத்து வித்தை காட்டியது குற்றம் என்பதால் பெண் சாமியார் கபிலாவிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தினார். 

இந்த விசாரணையில், கபிலா அம்மையார் புதுமையான விளகத்தை அளித்தார், அது என்னவென்றால் அம்மன் சொன்னதால் தான் பாம்புகளுக்கு பூஜை செய்ததாகவும், அம்மன் அருள் வந்ததால் தான் பாம்பு தனது கழுத்தில் சுற்றப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

 இதையடுத்து வனத்துறையினர், வன விலங்கு பாதுகப்பு சட்டத்தின் கீழ் பெண் சாமியார் கபிலாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்த வனத்துறை அதிகாரிகள் சாமியார் கபிலாவை கைது செய்துள்ளார். இந்த நிகழ்வு அப்பகுதி பொது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்துயுள்ளது.