அசுர வேகத்தில் வந்த பைக்! மோதி தூக்கி வீசப்பட்ட இளம்பெண்! பதைபதைக்க வைக்கும் cctv வீடியோ!

கன்னியாகுமரியில் சாலையைக் கடக்க முயன்ற இளம்பெண் மீது பைக் மோதி தூக்கி வீசி எறிந்த காட்சி வைரலாக பரவி வருகிறது.


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மேலும் பல குடியைச் சேர்ந்தவர் ஜெனிபர். இவர் தனது இரு சக்கர வாகனத்தில் நேற்று பணி நிமித்தமாக வெளியே புறப்பட்டுச் சென்றுள்ளார்.

பருத்தி விலை சந்திப்பில் வந்து நின்ற அவர் இருபக்கமும் ஏதேனும் வாகனங்கள் வருகிறதா என்று கவனித்து பார்க்கிறார். வாகனங்கள் எதுவும் வரவில்லை என்று உறுதி செய்துகொண்டு அவர் சாலையைக் கடக்க முயல்கிறார்.

அந்த கண் இமைக்கும் நேரத்தில் அதிவேகத்தில் இருசக்கர வாகனம் ஒன்று வந்து ஜெனிபர் இருசக்கர வாகனம் மீது பயங்கர வேகத்தில் மோதியது. அடுத்த நொடி இரு சக்கர வாகனத்துடன் ஜெனிபர் தூக்கி வீசப்பட்டார்.

இதில் பலத்த காயமடைந்த ஜெனிபர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு ஜெனிபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பைக்கில் வேகமாக வந்து ஜெனிபர் மீது மோதியது ராமன் புதூரைச் சேர்ந்த டென்னிஸ் என்ற இளைஞர் என தெரியவந்தது. காயமடைந்த அவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தக் கோர விபத்து அருகே உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த காட்சிகள் தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.