மகளிடம் தவறாக நடக்க முயன்றார்! கணவர் மீது மனைவி பகீர் புகார்! பிறகு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

''என் சாவுக்கு, எனது மனைவியும், மகளும்தான் காரணம்,'' என்று டைரியில் எழுதிவைத்துவிட்டு, டிரைவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.


கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமத்தைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் ராமலிங்கம். இவருக்கும், விஜயரூபா என்பவருக்கும் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பாக, திருமணம் நடைபெற்றது. இவர்கள், 2 பேருக்கும் 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

விஜயரூபா அஞ்சுகிராமம் பஞ்சாயத்து அலுவலகத்தில் பில் கலெக்டராகப் பணிபுரிந்து வருகிறார். எனினும், விஜயரூபா வேலைக்குச் செல்வது, அவரது கணவர் ராமலிங்கத்திற்குப் பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதன்பேரில், இருவருக்கும் இடையே, அடிக்கடி தகராறு ஏற்படுவதும் வழக்கமாக இருந்துள்ளது. இதனால், 2 பேரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு, தனது மகளின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக, ராமலிங்கம் தனது மனைவியின் வீட்டிற்குச் சென்றுள்ளார். 

அப்போது, அவர்கள் 3 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. உடனடியாக, இதன்பேரில், விஜயரூபா உள்ளூர் போலீசில் புகார் அளித்தார். அதில், தனது மகளிடம், கணவர் தவறாக நடக்க முயன்றதாக, விஜயரூபா கூறியிருந்தார். 

இதனை விசாரித்த போலீசார், ராமலிங்கத்தை தாக்கியதாகக்  கூறப்படுகிறது. இதனால், மன விரக்தி அடைந்த ராமலிங்கம், தனது டைரியில் மரண வாக்குமூலம் எழுதி வைத்துவிட்டு, நேற்றிரவு விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

இதுபற்றி ராமலிங்கத்தின் உறவினர்கள், நாகர்கோவில் ஆர்டிஓ அலுவலகத்தில் புகார் அளித்தனர். உரிய விசாரணை நடத்தப்படும் என, வருவாய்த்துறை அதிகாரி தெரிவித்தார்.  அதேசமயம், போலீசார் கூறுகையில், விசாரணை மட்டுமே நடத்தப்பட்டதாகவும், வேறு எந்த அத்துமீறலும் நடைபெறவில்லை எனவும் குறிப்பிடுகின்றனர்.