பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிரம்மச்சரியம் எப்படிப்பட்டது..? கவிஞர் கண்ணதாசன் என்ன சொன்னார் தெரியுமா?

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருமணம் முடிக்காமல் தேசமும் தெய்வீகமும் இரண்டு கண்கள் என்று வாழ்ந்தவர். அவர் மறைந்தபிறகு கவிஞர் கண்ணதாசன் எழுதியது என்ன தெரியுமா..?


எனக்கு தெரிந்தவரை தமிழகத்தில் இருந்த பிரம்மசாரிகளில் மிக முக்கியமானவர், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்கள். பெண் வாடையே இல்லாமல் வாழ்ந்தவர் அவர்.

உடம்பின் சுக்கித்தை உடம்புக்குள்ளேயே வைத்திருந்து மீண்டும் ரத்தத்திலேயே கலந்து விடுமாறு செய்யும் யோகத்தை தேவர் மேற்கொண்டிருந்தார். அவரது உடம்பின் பளபளப்புக்குக் காரணம் அது தான் என்று சொல்வார்கள். ஆனால், அப்படிப்பட்ட நைஷ்டிக பிரம்மசாரிகள் நீண்ட நாள் வாழ்வதில்லை...!

நீதியில் மறவன். நல்ல நேர்மையில் மறவன். நாட்டில் ஆதிநாள் தொட்டே போரில் அருஞ்செயல் புரிந்த செம்மல். சாதியில் மறவன். எங்கள் தமிழ்முத்து ராம லிங்கம். வாதிடும் திறமைக்கெல்லாம் வரலாற்றில் ஒருவன் அன்னான் !

நல்லறம் வளர்த்துக் காத்த நைஷ்டிக பிரமச்சாரி, இல்லறம் இல்லை. ஆனால் ஏற்காத அறமே இல்லை! கல்லையும் பணியச் செய்யும் கனிவுறும் அறத்தில் மிக்க வல்லவன் பசும்பொன் நாதன் வளர்புகழ் வளர்க மாதோ !

தேவரைப் பற்றி ஓர்நூல்; சிந்தனைச் செல்வன் செய்தான். பாவலர் எழுதின் மேல் பாடினர் ; அவனுக்கென்று கோவிலே எழுப்பினாலும் குறையொன்று சொல்வாரில்லை! காவலன் பசும்பொன் நாதன் காலத்தால் வாழ்க மாதோ!