கண்ணகி மதுரையில் பிறந்தார்! சோனியா பிரதமராக இருந்தார்! தாறுமாறாக உளறிய ஸ்டாலின்!

மு க ஸ்டாலின் துண்டு சீட்டு ஸ்டாலின் என்றும் விமர்சிப்பவர்களும் உண்டு. இதற்கு காரணம் துண்டு சீட்டை கையில் வைத்துக்கொண்டு அவர் பொதுக் கூட்டங்களில் பேசுவது தான். இப்படி துண்டு சீட்டு உதவியுடன் பேசியும் சில நேரங்களில் தவறான தகவல்களை தெரிவித்து பல்ப் வாங்குவதும் ஸ்டாலினுக்கு வாடிக்கை.


அந்த வகையில் மதுரையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசிய பேச்சுக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி சிரிப்பை ஏற்படுத்தி வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்னர் மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் வெங்கடேசன் சாகித்ய அகாடமி விருது பெற்றவர். ஆனால் வெங்கடேசனை அறிமுகம் செய்து வைக்கும் போது சத்திய அகாடமி விருது என்று கூறி சிரிப்பலையை உருவாக்கியுள்ளார் ஸ்டாலின். இது மட்டுமல்லாமல் ஒரு இடத்தில் சோனியா பிரதமராக இருந்த போது தமிழகத்தில் சேது சமுத்திரத் திட்டம் துவங்கப்பட்டது கூறி அதிர வைத்தார் ஸ்டாலின்.

சோனியா பிரதமராக இருந்ததே இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது என்று கூறுவதற்குப் பதில் சோனியா பிரதமராக இருந்ததாக கூறி விமர்சனத்திற்கு ஆளானார் ஸ்டாலின்.

இதையெல்லாம் விட அவர் அன்று பேசியதிலேயே highlights என்று ஒரு பாயிண்ட் இருக்கிறது. அது என்னவென்றால் கண்ணகி மதுரையில் பிறந்தார் என்று கூறி அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார் ஸ்டாலின். கண்ணகி பூம்புகாரை சேர்ந்தவர் என்பது கூட தெரியாமல் மதுரையில் பிறந்தவர் என்று துண்டு சீட்டை பார்த்து படித்து சமூக வலைதள வாசிகளுக்கு நல்ல விருந்து கொடுத்துள்ளார் ஸ்டாலின்.