பிக்பாஸ் 3 வீட்டில் மீண்டும் கஞ்சா கருப்பு! ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

பிக்பாஸ் 3 வீட்டிற்குள் நடிகர் கஞ்சா கருப்பு மீண்டும் வந்ததால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர்.


பிக்பாஸ் ஒன் வீட்டில் அதிரி புதிரி செய்தவர் கஞ்சா கருப்பு. ஓவியாவுடன் இவர் போட்ட சண்டை தற்போது வரை பிரபலம். முதல் சீசனில் கஞ்சா கருப்புவும் வீட்டில் இருந்தவர்களும் அடித்த லூட்டி செம ஜாலி டைப்.

ஆனால் பாதியிலேயே கஞ்சா கருப்பு எலிமினேட் ஆகிவிட்டார். இதனால் ரசிகர்கள் கவலை அடைந்தனர். இந்த நிலையில் இன்று தொடங்கிய பிக்பாஸ் சீசன் 3ல் கஞ்சா கருப்பு தோன்றினார்.

போட்டியாளர் நடிகர் சரவணன் வந்த போது அவருடன் கஞ்சா கருப்புவையும் பார்க்க முடிநத்து. இதனால் அவரும் ஒரு போட்டியாளர் என்று நினைத்து ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.

ஆனால் கஞ்சா கருப்பை சிறப்பு விருந்தினராக அழைத்து வந்துள்ளனர் விஜய் டிவி நிர்வாகத்தினர். இதனால் உற்சாகம் அடைந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதாவது கஞ்சா கருப்பு வீட்டில் போட்டியாளராக இருப்பார் என்று கருதப்பட்டது.

ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. இதனால் கஞ்சா கருப்புவே சற்று சோகமாகத்தான் இருந்துள்ளார்.