கருணாநிதி சமாதியில் தன்னுடைய வெற்றியை வைத்து வணங்கியிருக்கிறார் கனிமொழி. எப்படியும் மத்திய அமைச்சராக பதவியேற்கலாம் என்ற கனவு சுக்குநூறாக உடைந்து போனதால் நொந்துபோயிருக்கிறார். அதனால், வாழ்த்து சொல்பவர்களுக்கும் உற்சாகமாக பதில் கொடுப்பதில்லை.
வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி! கனவான கனிமொழி ஆசை!
மத்தியில் காங்கிரஸ் அல்லது மூன்றாவது அணி ஆட்சி அமைத்ததும் வெளியுறவுத் துறை அமைச்சகம் பெற வேண்டும் என்பதுதான் கனிமொழியின் ஆசையாக இருந்ததாம். அதேபோல் மீண்டும் தொலைதொடர்புத் துறை பெற வேண்டும் என்பதுதான் ஆ.ராசாவின் ஆசையாம். இந்த விஷயத்தில் மாறனுக்கும் ராசாவுக்கும் போட்டி இருந்தது தனிக் கதை.
இப்போது பா.ஜ.க. மட்டும் தனித்தே 272 தொகுதியில் ஜெயித்து மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டது. கூட்டணியுடன் சேர்த்து 352 என்பதால், இனிமேல் தி.மு.க.வின் ஆதரவு வேண்டியதே இல்லை.
இப்போது டெல்லியில் ஒட்டுமொத்தமாக போய் கோஷம் போடவும், வெளிநடப்பு செய்யவும்தான் முடியும். அமைச்சராக ஆசைப்பட்டுத்தானே மக்களவைத் தேர்தலில் நின்று ஜெயித்தேன், இப்படியாகும் என்று தெரிந்திருந்தால், அடுத்த சட்டமன்றத் தேர்தலிலேயே நின்றிருப்பேன் என்று வருந்துகிறாராம். ஒட்டுற மண்ணுதான் ஒட்டும்னு தெரியாதா கனிமொழி.