குழந்தைகளின் பேவரைட் காரமெல் வேஃபர் பிஸ்கட்டில் இரும்புத் துண்டு! நூலிழையில் உயிர் தப்பிய சிறுமி! காஞ்சிபுரம் பரபரப்பு!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குழந்தைகள் சாப்பிடும் காரமெல் வேஃபர் பிஸ்கடில் இரும்பு தூண்டுகள் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.


காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்கொளத்தூர் அருகே உள்ள நின்னகரை பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் இவர் நேற்று அதே பகுதியில் உள்ள கிருஷ்ணா ஸ்டோரில் தனது உறவுக்கார சிறுவனுக்காக  காரமெல் வேஃபர் பிஸ்கட்  ஒன்றை வாங்கிச் சென்றுள்ளார். இதை எடுத்து அதை சிறுவனிடம் கொடுத்துள்ளார்.

சிறுவன் அந்த பாக்கெட்டை பிரித்து சாப்பிடும் போது அதில் இரும்புத்துண்டு இருப்பதை தனது பெற்றோரிடம் காண்பித்துள்ளார். இதையடுத்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து கடையில் சென்று முறையிட்டனர். அதற்கு சரியான பதில் கிடைக்காததால் உடனே மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலரான அனுராதாவிடம் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரை ஏற்று சம்பந்தப்பட்ட கடையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது குஜராத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட இந்த பிஸ்கட் பாரிமுனை டீலர் மூலம் இந்த கடைக்கு கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. உங்களில் சம்பந்தப்பட்ட டீலரின் முகவரியை பெற்று சென்னை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் சென்னை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மூலம் குஜராத் அரசு உணவு பாதுகாப்புத்துறை ஆணையருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது இதையடுத்து காரமெல் பிஸ்கட் கம்பெனி மீது விசாரணை நடத்தப்படும் என குஜராத் அரசு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.