காஞ்சியை கலக்கும் உள் ஆடை திருடன்! இளம் பெண்கள், இளைஞர்கள் ஜாக்கிரதை!

காஞ்சி அருகில் தனியார் ஆண்கள் மேன்ஷனில் புகுந்த மர்ம நபர்கள் செல்போன் மற்றும் பணம் திருடி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


காஞ்சி, இள்ளலூரில் உள்ள தனியார் ஆண்கள் தங்கி வேலைப்பார்க்கும் விடுதியில் கேரளாவை சேர்ந்த அப்துல் கஃபூர் என்பவர் நண்பர்களுடன்  தங்கியுள்ளார்.வெயில் காலத்தில் மின்சாரம் துண்டிப்பை சமாளிக்க முடியாமல்,  நேற்று முன்தினம் இரவு அறையின் கதவு திறந்த படி விட்டு தூங்கியுள்ளனர்.

இந்த நிலையில் அறைக்குள் நுழைந்த மர்ம நபர்கள்  அப்துல் கஃபூரின் செல்போன்,  அறையில் இருந்த 87 ஆயிரம் ரொக்கத்தை பணம் மேலும் உடன் அறையில் தங்கிருந்த மற்ற மூவரின் செல்போன்கள் திருடி செல்லப்பட்டுள்ளது.

மேலும் அங்கிருந்த காலணி ஒன்றையும் அவர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதில் கொடுமை என்ன என்றால் அங்கிருந்த உள் ஆடைகளையும் அந்த நபர்கள் அள்ளிச் சென்றுள்ளனர். இதே போல் பெண்கள் மாடியில் காய வைக்கும் உள் ஆடைகளையும் அவர்கள் திருடியுள்ளனர். 

மேஷனில் படிக்கட்டு வழியாக இரு நபர்கள் சம்பவதின் போது ஏறி இறங்கும் சி.சி.டி.வி காட்சிகள் உட்பட பாதிக்கபட்டவர்கள்  இது குறித்து புகார் கொடுக்கத் திருப்போரூர் காவல் நிலையம் சென்றும், புகாரை எடுத்துக்கொள்ளாமல் போலீசார் தொடர்ந்து அலட்சியமாக நடந்துக்கொள்வதாக குற்றம் சாட்டுகின்றனர்.