பிச்சை எடுக்க தயாராக இருந்த காமராஜர் – இவரைப் போன்று தலைவன் உண்டா?

முதல் அமைச்சர் ஆணையிட்டால் ஆயிரம் பேர் நிதி கொடுப்பார்கள் என்பது இந்தக் காலம்.


ஏனென்றால், முதல்வரிடம் நிதியைக் கொடுத்துவிடு, தேவையானதை சாதித்துக்கொள்வார்கள். ஆனால், காமராஜரிடம் யாரும் எதையும் சட்டத்துக்குப் புறம்பாக பெற முடியாது. அதனாலே தன்னுடைய திட்டத்துக்கு நிதி சேர்க்க பிச்சை எடுக்கவும் தயார் என அறிவித்தார் கர்மவீரர்.

பகல் உணவுத் திட்டத்தை முதலில் பாரதியின் எட்டயபுரத்தில் தொடங்கினர். பகல் உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்துப் பேசிய காமராஜ் பேசினார். அப்போது அவர்,  "...நாம் பெறத் தவறிவிட்ட படிப்பை, வரும் தலைமுறையாவது பெற்று, வளர்ந்து வாழட்டும். அன்னதானம் நமக்கு புதியது அல்ல. இதுவரை வீட்டுக்கு வந்தவர்களுக்குப் போட்டோம்.

இப்போது, பள்ளிக் கூடத்தை தேடிப்போய் போடச்சொல்கிறோம். அப்படி செய்தால் உயிர் காத்த புண்ணியம், படிப்பு கொடுக்கும் புண்ணியம் இரண்டும் சேரும். என் மனதில், எல்லோர்க்கும் கல்விக் கண்ணைத் திறப்பதை விட முக்கியமான வேலை இப்பொதைக்கு இல்லை.

நான் இதையே எல்லாவற்றிலும் முக்கியமானதாகக் கருதுகிறேன். எனவே மற்ற வேலைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு, ஊர் ஊராக வந்து, பகல் உணவுத் திட்டத்திற்க்குப் பிச்சையெடுக்கச் சித்தமாக இருக்கிறேன்" என்று பேசினார். 

இப்படிப்பட்ட தலைவர் என்று இன்று ஒருவரையாவது சுட்டிக்காட்ட முடியுமா?