என்னாது, தி.மு.க. 1 லட்சம் மனு கொடுக்கவே இல்லையா..? எல்லாமே போலி மனுக்களாம். காமராஜர் போட்டுக் காட்டிய வீடியோ ஆதாரம்.

கொரோனா காலத்தில் உங்களுக்கு என்ன உதவிகள் வேண்டும் என்று மக்களிடம் கேட்டு, மனுக்களை வாங்கிய ஸ்டாலின், அதனை அப்படியே பண்டல் கட்டி கலெக்டர் அலுவலகத்திலும், சென்னை தலைமைச் செயலாளரிடமும் ஒப்படைத்தார். இந்த விவகாரம் அப்போதே பெரும் பரபரப்பைக் கிளப்பியது.


இந்த நிலையில், அந்த மனுக்கள் எல்லாம் உருப்படியானவை அல்ல என்று அமைச்சர் காமராஜ் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். அவர் பேசுகையில், ‘‘ஸ்டாலின். 15 லட்சம் அழைப்புகள் பெற்று, 14 லட்சம் பேருக்கு உணவுகள் வழங்கியுள்லோம் என்று தெரிவித்தார். மீதமுள்ள 1 லட்சம் மனுக்களை தலைமைச் செயலாளரிடம் ஒப்படைத்தார். அவர் ஒரு லட்சம் மனுக்கள் என்று சொன்னாலும் 98 ஆயிரத்து 752 மனுக்கள் கொடுத்தார். 

இதை முதல்வரின் தனி பிரிவுக்கு அனுப்பினார் தலைமைச் செயலாளர். தனிப் பிரிவில் மனுக்களை ஆய்வு செய்கிறார்கள். அந்த மனுக்களில் ஒரு மனுவில் கூட போக்குவரத்து வசதியோ சிறு குறு நடுத்தர தொழில் பற்றியோ இல்லை. பத்திரிகையாளர்கள் எப்போது வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம். எல்லாமே ட்ரை ரேஷன் உணவுத் தேவைகள், உணவுப் பொருட்களும் இருக்கிறது. எங்கள் துறைக்கு அனுப்பினார்கள். எங்கள் துறை சார்பில் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பப்படுகிறது. எல்லா மாவட்டங்களில் இருந்தும் ரிப்போர்ட் வாங்கிவிட்டோம்” என்று குறிப்பிட்டார் உணவுத் துறை அமைச்சர்.

மேலும், அந்த விண்ணப்பங்களில் இருக்கும் பலர் உண்மையாகவே தி.மு.க.விடம் மனு ஓப்படைக்கவில்லை என்றும் தெரிவித்து, அதற்கு ஆதரவாக ஒருசில வீடியோக்களையும் போட்டுக் காட்டினார்.

எவ்வளவு தப்பு இருக்கிறதோ, அதைக் கழிச்சுட்டு மத்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுங்கள் யுவர் ஆனர்.