கமல்ஹாசன் முதல்வராக மட்டும்தான் இருப்பாரா…? தெறித்து ஓடும் ரஜினி…

ரஜினி கட்சி வெற்றி அடைந்தால் கமல்ஹாசனே முதல்வராக இருப்பார் என்று மக்கள் நீதி மய்யம் குமாரவேல் தெரிவித்த கருத்து, கடும் அதிருப்தியை ரஜினி ரசிகர்களிடம் ஏற்படுத்திவிட்டது.


ஆனால், அதைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல், கமல்ஹாசன் முதல் அமைச்சர் என்ற கட்டுப்பாட்டை ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என்று மக்கள் நீதி மய்யம் இன்று ஒரு முடிவு எடுத்துள்ளது. இது குறித்து காரசார பதிவு ஒன்று பதிந்துள்ளார் பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன்.

வெறும் மூன்றரை சதவிகித ஓட்டு வங்கியை வைத்துக் கொண்டு முதல்வராவதற்கான ’தில்’லு சாதாரணமானதா? ஆனா,பாவம்…! இப்படி அறிவிச்ச பிறகும் தமிழ் நாட்டிலே உள்ள எந்த கட்சியும் அவங்கள சீண்டியதா தெரியல! ஆனா, லெட்டர் பேடு கட்சிங்க கிடைக்கலாம். மத்த கட்சிங்க அவரை முதலமைச்சரா ஏத்துக்கிடறது இருக்கட்டும்…அந்தக் கட்சியில இருக்கிறவங்க முதலில் ஏத்துக் கிடறாங்களான்னு தெரியல…!

ஏன்னா, கட்சி தொடங்கியதில் இருந்து எக்க சக்கமானவங்க ம.நீ. மையத்திலிருந்து தெறிச்சு வெளியில வந்த வண்ணம் இருக்காங்க…! கமலுக்காக முப்பது ஆண்டுகள் ரசிகர்மன்றத்தில் ஏராளமான நற்பணிகளை செய்த பலர் விலகினார்கள்!

சிறந்த சமூக செயல்பாட்டாளரும், பொதுவுடமைச் சிந்தனையாளருமான பாரதி கிருஷ்ணகுமார், திராவிட இயக்க செயல்பாட்டாளரான செளரிராஜன், அருமையான களப் பணியாளரான சுகா, விவசாயப் போராளியான பி.ஆர்.பாண்டியண், மற்றும் சி.கே குமாரவேல்..... ஆகிய முக்கிய ஆளுமைகளான இரண்டாம் கட்டத் தலைவர்களை பறி கொடுத்தார்! பேராசிரியர். கு.ஞானசம்மந்தன் கூட கட்சி பணிகளில் இருந்து முற்றாக விலகிக் கொண்டு,தனிப்பட்ட முறையில் கமலோடு ஒரு கெளரவமான நட்பை பேணிக் கொள்கிறார்!

அடுத்ததாக மாவட்டவாரியாக பல பொறுப்பாளர்கள் விலகினார்கள். அனைவரும் சொன்ன காரணம், ’’கமலஹாசனின் சொல்லுக்கும்,செயலுக்கும் உள்ள மிக பிரம்மாண்ட வித்தியாசம் தான் எங்களை விலக வைத்தது!’’. நான் கவனித்த வரையில் கமலஹாசன் தன் சகாக்கள் யாரிடமும் உண்மையான அன்போ, நட்போ பாராட்டுபவராகத் தெரியவில்லை!

எப்போதும் அவர் தன்னை தனி மனிதராகவே உணர்கிறார்.அதனால் தான் அவர் யாரிடமும் கலந்து பேசாமல் எல்லா முடிவுகளையுமே தன்னிச்சையாக எடுக்கிறார் என்று நினைக்கிறேன்! இப்படிப்பட்டவர்கள் ஒரு போதும் தலைவர்களாக முடியாது!

அவருக்கான கடவுள் நம்பிக்கையில்லாதவர் என்பதற்கான இமேஜ், கொஞ்சம் இடதுசாரி வாடை உள்ளவர் என்பதற்கான இமேஜ் ஆகியவற்றை வைத்து,அவரை வளர்த்துவிட்டு,திமுகவிற்கு மாற்றாக அவரை புரஜக்ட் பண்ணலாம் என பா.ஜ.க கணக்குப் போட்டது. அதற்கு தோதாக, ரஜினிகாந்த் கமலை ஆதரித்தால் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று அவர்கள் அமைதி காத்தனர்.

ஆனால், ரஜினிக்கோ,ரஜினி கூட இருப்பவர்களுக்கோ கமலஹாசன் அவ்வளவு நம்பிக்கைக்குரியவர் அல்ல என்ற எண்ணம் பரவலாக ஏற்பட்டுவிட்டது. இதனால்,தற்போது கமல் தனித்துவிடப்பட்டுள்ளார்! பல விஷயங்களில் பா.ஜ.கவிற்கு ஒத்திசைவான அவருக்கு உள்ளதால், அவர் தனித்து நிற்பதும் கூட திமுகவை பலவீனப்படுத்த உதவும் என்ற நிலையில் அதை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதே பா.ஜ.க மேலிடத்தின் பார்வையாக உள்ளது!

தமிழகத்தில் மக்களுக்கான உண்மையான ஒரு அரசியல் இயக்கம் என்ற இடம் இன்னும் யாராலும் நிரப்பபடாமல் வெற்றிடமாகவே உள்ளது.அதை பயன்படுத்தும் வாய்ப்பை கமலஹாசன் தன் குறுகிய ஆதாயங்களுக்காக பறிகொடுத்து விட்டார் என்கிறார் சாவித்திரி கண்ணன்.