ஸ்டாலின் பிடியில் இருந்து தப்பிய கமல்ஹாசன்! வெளிநாடு தப்பியோட்டம்!

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ரஜினி ஏடாகூடமாக ட்வீட் செய்ய, கமல்ஹாசன் காட்டமாக அறிக்கை விட்டார்.


அதனால் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற ரீதியில் கமலுடன் கைகுலுக்க ஸ்டாலின் ஆர்வமாக இருந்தார். அதனால், 23ம் தேதி நடக்க இருக்கும் பேரணியில் கமல் கலந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதற்காக, திமுக அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி, பூச்சி முருகன் ஆகியோர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.

இதனையடுத்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர்கள் அருணாச்சலம், சவுரிராஜன் ஆகியோர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்கள். அதாவது பேரணியில் கமல்ஹாசன் கலந்துகொள்ள முடியாது என்பதை சொல்லத்தான் வந்தார்களாம். 

சிகிச்சைக்காக கமல்ஹாசன் வெளிநாடு செல்ல இருப்பதால், அவரால் பேரணியில் பங்கேற்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டதாம்.

எப்படியாவது இந்த பேரணியில் கமல்ஹாசன் கலந்துகொள்வார் என்று எதிர்பார்த்து காத்திருந்த தி.மு.க.வினர் அப்செட் ஆகியிருக்கின்றனர். கமல் கலந்துகொண்டால், ரஜினியை தனிமைப்படுத்தலாம் என்ற எண்ணம் அவுட்டான கவலையில் இருக்கிறார்கள் உடன்பிறப்புகள்.