கிரேஸி மோகன் இறுதிச்சடங்கு! புது கேர்ள் பிரண்டுடன் வந்த மநீம தலைவர்!

எனக்கு இத்தனை புகழ் கிடைத்திருக்கிறது என்றால், அதற்கு காரணம் கமல்ஹாசன்தான் என்று மனம் திறந்து பேட்டிகளில் சொல்லியிருப்பவர் கிரேஸி மோகன். அவர் வெறுமனே நகைச்சுவை எழுத்தாளர் மட்டுமல்ல, நகைச்சுவை ஞானி என்று வருத்தத்திலும் புகழ்ந்தார் கமல்ஹாசன்.


இருவருக்கும் இடையில் மறைக்க எதுவுமே இல்லை எனும் அளவுக்கு ஒருவரையொருவர் புரிந்து வைத்திருந்தார்கள். இதை உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் இன்று தன்னுடைய புதிய தோழியாக இன்னமும் வெளிப்படையாக வெளியுலகிற்கு மட்டும் அறிவிக்காத பூஜா குமாருடன் கிரேஸி மோகனின் இறுதி ஊர்வலத்தில் கமல்ஹாசன் கலந்துகொண்டார்.

பூஜா குமாருக்கு ஏகப்பட்ட பணம் இருக்கிறது என்பதும், அவர் இப்போது கமல்ஹாசனுடன் வாழ்ந்துவருகிறார் என்பதும் இந்தக் கட்டுரைக்குத் தேவையில்லாத விஷயம். அதனால், இனி கிரேஸி மோகனின் ஒரு புகழ்பெற்ற குட்டி பேட்டியைப் பார்க்கலாம். உங்களுக்கு ‘கிரேஸி’ ங்கிற பட்டப் பெயர் எப்படி வந்தது?

எல்லோரும் ‘கிரேஸி’ங்கிற பட்டப் பேருக்கான காரணத்தைத்தான் கேட்கறீங்க. ’மோகன்’ற பேருக்கும் ஒரு காரணம் இருக்கு. அதை முதல்ல சொல்றேன். எங்க தாத்தாவுக்கு சட்டத்தின்மேல் அபார மரியாதை. அதனால் பிரபல வழக்கறிஞரான ’மோகன் குமாரமங்கலம்’ நினைவாக எனக்கு மோகன்னு பேர் வெச்சிட்டாங்க. ஆனந்தவிகடந்தான் எனக்கு, ‘கிரேஸி’ங்கிற பட்டம் கொடுத்துச்சு.

நிறைவேறாத ஆசை? நிறைவேறிய ஆசை? ரமணர் போல பெரிய ஆன்மிக வாதியாக வணும்னு ஆசைப்பட்டேன். நிறைவேறல. ‘சோ’ வுடைய நாடகங்களுக்கு அடிக்கடி போவேன். அப்ப அவருக்கு எழும் கரகோஷத்தைப் பார்த்து நமக்கும் இப்படியெல்லாம் கிடைக்குமான்னு ஏங்கியிருக்கேன். இப்ப எனது நாடகங்களில் எனக்கே அது கிடைக்கிறது. மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

ஜானகி யாருடைய பெயர்?  ஜானகின்னு ஒரு டீச்சர். ரொம்ப நல்லாப் பாடம் எடுப்பாங்க. எல்லா ஸ்டூடன்ட்ஸ்கிட்டயும் அன்பாப் பழகுவாங்க. இப்பவும் நான் கதை வசனம் எழுதும் படங்களில் கதாநாயகி பெயர் ஜானகின்னு வைக்கணும்னு கோரிக்கை வைப்பேன். அதே போல வச்சிடுவாங்க. தினமும் அவங்களை நினைச்சுக்குவேன்.

உங்க ரோல் மாடல் யாரு? நடிகர் கமல்ஹாசன்தான். என்னுடைய ஒவ்வொரு வெற்றிக்குப் பிறகும் அவர் இருக்கிறார். வீட்டில் கோபித்துக்கொண்ட அனுபவம் ஏதாவது? சில சமயம் கோபித்துக்கொண்டு வெளியே போயிருக்கிறேன். எப்படியும் பாட்டி வந்து சமாதானப் படுத்திக் கூட்டீட்டுப்போவாங்கன்னு ஒரு நம்பிக்கை. அதே மாதிரி கூட்டிகிட்டும் போயிருக்காங்க.

பள்ளிக்கூடத்தில் யாருடனாவது சண்டை போட்ருக்கீங்களா? சங்கர நாராயணன்னு ஒரு பையன். என் ஜாமென்ட்ரி பாக்ஸை எடுத்துவச்சிகிட்டான். பாட்டிகிட்டே சொன்னேன். பாட்டி ஆவேசமாகப் பள்ளிக்கூடத்துக்கே வந்துட்டாங்க. சங்கர நாராயணனுக்கு செம பேரேட்! எனக்கே அவனை நாலு சாத்து சாத்தணும்னு ஆசை. அடிக்கவெல்லாம் என்னால் முடியாதே! என் டிசைன் அப்படி.

அப்புறம் சங்கர நாராயணனுக்குப் பயந்துகொண்டு ஸ்கூலுக்குப் போகாமல் பீச்சில் போய் உட்கார்ந்துக்குவேன். ஸ்கூல் விடுற நேரம் வீட்டுக்குப் போயிடுவேன். ஷூவில் பீச் மண்ல ஒட்டியிருப்பதைப் பார்த்து விஷயத்தைக் கண்டுபிட்சிட்டாங்க. பின்னிட்டாங்க என்னை. அப்புறம் பாட்டி சமாதானப்படுத்தி, கூடுதலாக 3 அப்பளம் கொடுத்து தாஜா செஞ்சாங்க.

பாட்டு எழுதியிருக்கீங்களா? வெண்பா எழுதுறதுன்னா ரொம்பப் பிடிக்கும். ‘ஔவை ஷண்முகியில், ’தூணுக்குள்ளும் இருப்பாண்டி, துரும்பிலும் இருப்பாண்டி’ என்ற வரிகள் நான் எழுதினது. பாடலைக் கவிஞர் வாலி முடிச்சு வச்சார். அதில் கதாநாயகன் பெயர் பாண்டி என்பதுதான் இதில விசேஷம். சின்ன வயசுல ரொம்பப் பிடிச்ச விளையாட்டு? வேறென்ன? கிரிக்கெட்தான். இப்பவும் கிரிக்கெட்தான் பிடிச்சிருக்கு.

ரொம்பப் பிடிச்ச உணவு? அன்றும், இன்றும் என்றும் தயிர்சாதம்தான். நான் ஒரு தயிர்சாதப் பிரியன்!  யாருக்காவது பட்டப் பெயர் கொடுத்திருக்கிறீர்களா? நான் இன்ஜினியரிங் படித்தபோது என் வகுப்பில் மூன்றே மூன்று பெண்கள்தான் இருந்தார்கள். அவர்களுக்கு, ‘பன், பட்டர், ஜாம்’ என்று பட்டப் பெயர் கொடுத்திருந்தோம். இப்பல்லாம்  கல்லூரிகளில் பேக்கரியே இருக்கு!

முதல் மேடை அனுபவம்? ’அலிபாபாவும் ஆயிரம் வாட்ஸ் பல்பும்’கிற நாடகம்தான் முதல் மேடை அனுபவம் எனக்கு. அந்தக் காலத்தில் இருந்து இப்போது வரை அந்த நாடக ட்ரூப் நண்பர்கள் ஒன்றாகவே இருக்கிறோம். தொடர்ந்து நாடகங்கள் நடத்திக்கொண்டுதான் இருக்கிறோம்.