ரஜினிகாந்திற்கு விருது வழங்கப்பட்டதை பா.ஜ.க. கூட்டணிகள் அத்தனை பேரும் மாய்ந்து மாய்ந்து பாராட்டி வருகின்றனர். தி.மு.க. கூட்டணியிலும் பலர் வாழ்த்திவிட்டனர். ஆனால், இன்னமும் அது குறித்து எந்தக் கருத்தும் சொல்லாமல் ஒருவர் இருக்கிறார் என்றால் அது கமல்ஹாசன்தான்.
கமல்ஹாசன் கலைச்சேவை செய்யவில்லையா? ரஜினி மீது கோபத்தில் மய்யம்
இத்தனைக்கும் ரஜினியின் நண்பர் என்று அவ்வபோது சொல்லிக்கொள்வார். அவர் ஏன் ரஜினியை பாராட்டி ட்வீட் போடவில்லை என்று மய்யம் வட்டாரத்தில் விசாரித்தபோது கொந்தளித்துவிட்டனர்.
ரஜினிகாந்த் வெறுமனே நடிகர் மட்டும்தான். ஆனால், கமல்ஹாசன் பிறவிக் கலைஞர். கதை, வசனம், இயக்கம், பாடல், நடனம் என்று கமல்ஹாசன் தொடாத துறைகளே இல்லை. மேலும் தான் சினிமாவில் சம்பாதித்த அத்தனை பணத்தையும் சினிமாவுக்காகவே இழந்தவர்.
அப்படிப்பட்ட கலைஞன் 60 ஆண்டுகளாக திரைத்துறையில் இருப்பதைக் கொண்டாட மத்திய அரசும் மாநில அரசும் முன்வரவில்லை. கலைஞானத்துக்கு கைகொடுக்கும் ரஜினிகூட கமல்ஹாசனுக்குக் குரல் கொடுக்கவில்லை. அப்படிப்பட்ட ஒருவருக்காக எங்கள் தலைவர் ஏன் வாழ்த்து தெரிவிக்க வேண்டும்.
ரஜினியை வைத்து பா.ஜ.க. அரசியல் செய்கிறது, அது தெரிந்தும் ரஜினிகாந்த் அவர்களின் அடிமையாக இருக்கிறார். அப்படிப்பட்ட அரசியல் அடிமைகளை கண்டுகொள்ளப் போவதில்லை. நாங்கள் இந்த உலகமே வியக்கும் வகையில் கமல்ஹாசனுக்கு விழா எடுக்கப் போகிறோம் என்று தெரிவிக்கிறார்கள்.
நல்லா செய்யுங்க சாரே.