திருப்பரங்குன்றத்தில் கமல் மீது செருப்பு வீச்சு! நடந்தது என்ன?

மக்கள் நீதி மையம் தலைவர் கமலை நோக்கி திருப்பரங்குன்றத்தில் செருப்பு வீசப்பட்ட விவகாரத்தில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.


சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கமல் கூறியதைத் தொடர்ந்து நாடு முழுவதும் சர்ச்சை ஏற்பட்டது. 

கமலுக்கு எதிராக பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கொந்தளித்து வருகின்றனர். தமிழ் மீது அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர சுமார் 40 பேர் கமலுக்கு எதிராக காவல் நிலையங்களிலும் நீதிமன்றங்களிலும் வழக்கு தொடுத்துள்ளனர்.

இந்த சர்ச்சையை தொடர்ந்து இரண்டு நாட்கள் பிரச்சாரத்தை ரத்து செய்த கமல் நேற்று திருப்பரங்குன்றத்தில் தனது பிரச்சாரத்தை தொடர்ந்தார். அப்போது நாட்டின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று தான் கூறி எதிர் சரித்திர உண்மை என்று கூறி மீண்டும் இந்து அமைப்புகளை வம்புக்கு இழுத்தார் கமல். இந்த நிலையில் நேற்று இரவு திருப்பரங்குன்றத்தில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பொதுக்கூட்டத்தில் கமல் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென சலசலப்பு ஏற்பட்டது. சுமார் 10 பேர் கமலுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார். அப்போது ஒரு நபர் மேடையை நோக்கி செருப்பு வீசினர். ஆனால் அந்த செருப்பு மேடைக்கு அருகாமையில் கூட செல்லாமல் கீழே விழுந்துவிட்டது. அந்த பத்து பேரையும் போலீசார் அங்கிருந்து கைது செய்து அழைத்துச் சென்றனர்.

கமல் பொதுக்கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்திய 10 பேரும் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதை போலீசார் தற்போது வரை வெளியிடவில்லை. மாறாக அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசுவதால் மட்டுமே தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.